நாகூரில் மஜக சார்பாக பொதுமக்களின் தாகம் தீர்க்கும் நீர்மோர் பந்தல் திறப்பு….

மே,03.,

தமிழகத்தில் கொடை வெயிலின் தாக்கம் உக்கிரமடைந்து வரும் சூழலை கருத்தில் கொண்டு மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் அறிவுறுத்தலின் பேரில்

மனிதநேய ஜனநாயக கட்சி நாகை மாவட்டம் நாகூர் நகரம் சார்பில் நாகூர் கடைத்தெரு தர்கா அலங்கார வாசலில் பொதுமக்களின் தாகம் தீர்க்கும் நீர் மோர் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வை மஜக மாவட்ட அவைத் தலைவர் சதக்கத்துல்லா அவர்கள் பொது மக்களுக்கு நீர் மோர் வழங்கி தொடங்கி வைத்தார்.

இதில் 500 க்கும் மேற்ப்பட்ட பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டது கொடைக்கலாம் முடியும் வரை இப்பணியை செய்ய தீர்மானிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் மாவட்ட துணைச் செயலாளர் பாலமுரளி, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் திருப்பூண்டி ஷாகுல், நாகூர் நகர செயலாளர் ஷாகுல் ஹமீது, நகர பொருளாளர் முகமது யாசர், நகர இளைஞரணி செயலாளர் செல்லப்பா, நகர தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் இஸ்மாயில், மீராஉசேன்,ஜெஹபர் சாதிக், இப்ராஹிம், ஜெஹபர் சாதிக் என்கிற யாசர் மற்றும் திரளான மஜக வினர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு வழங்கினர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#நாகை_மாவட்டம்.
03.05.2024.