ஆதலையூர் ஊராட்சி இடைத்தேர்தல் மஜக வேட்பாளர் அன்வர்தீன் அமோக வெற்றி!

ஜூலை.12.,

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஆதலையூர் ஊராட்சியின் 9-வது வார்டுக்கு கடந்த ஜூலை 9 அன்று இடைத்தேர்தல் நடைபெற்றது.

அதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் ஒன்றிய செயலாளர் அன்வர்தீன் அவர்கள் சீப்பு சின்னத்தில் போட்டியிட்டார்.

அவரை எதிர்த்து 7 கட்சிகள் அடங்கிய திமுக அணியின் சார்பிலும், 5 கட்சிகள் அடங்கிய அதிமுக அணியின் சார்பிலும், சுயேச்சையாகவும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர்.

இன்று வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் 41 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக கூட்டணி வேட்பாளரை மஜக வேட்பாளர் அன்வர்தீன் அவர்கள் தோற்கடித்து வாகை சூடினார்.

கடுமையான போட்டிக்களத்தில் மஜகவினர் தன்னந்தனியாக நின்று வென்றுள்ளனர்.

வெற்றி பெற்ற அன்வர்தீன் அவர்களுக்கு பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் அலைபேசி வழியாக வாழ்த்துக் கூறினார்.

மாவட்ட செயலாளர் ரியாஸ், பொருளாளர் சதக்கத்துல்லா, துணைச் செயலாளர் முன்சி யூசுப்தீன் ஆகியோரின் தலைமையில் மஜகவினர் நல்லமுறையில் களப்பணியாற்றியதற்கு துணைப் பொதுச் செயலாளர் நாச்சிகுளம் தாஜூதீன், மாநில செயலாளர் நாகை முபாரக் ஆகியோரும் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#நாகை_மாவட்டம்
12.07.2022