
ஜனவரி 29., இன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி வருகை தந்தார்.
நெய்வாசல் பெரிய பள்ளிவாசலில் அனைத்து பள்ளி ஜமாத் நிர்வாகிகளும், மிஸ்பா குல் ஹீதா மதரஸா முதல்வர் மற்றும் பேராசிரியர்களும் ஒன்று கூடி ஏற்பாடு செய்த வரவேற்பு நிகழ்வில் பங்கேற்று கலந்துரையாடினார்.
வழிபாட்டு தலங்களில் ஒலிபெருக்கிகளை பயன்படுத்துவதில் உள்ள ஒழுங்குகள், மேடை சொற்பொழிவுகளில் பேண வேண்டிய கட்டுப்பாடுகள், சமூக வலைதளங்களில் பின்பற்ற வேண்டிய வரையறைகள், சமூக நல்லிணக்கத்தை பாதுகாத்தல் ஆகியன குறித்து விவாதித்தார்.
இந்திகழ்வு அழகிய கலந்துரையாடலாக அமைந்தது.
இது பயனுள்ள அமர்வாக இருந்ததாக அனைவரும் கூறினர்.
பிறகு நீடுரில் சமீபத்தில் காலமான மஜக சகோதரர் ஜெகபர் அலி வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறினார்.
இந்நிகழ்வுகளில் மாவட்ட பொருளாளர் ஆக்கூர் ஷாஜஹான்,மாவட்ட துணை செயலாளர்கள் M.S.மிஸ்பா, M.S.அஜ்மல் உசேன், Y.H.ஹாஜா சலீம், மாவட்ட விவசாய அணி செயலாளர் லியாகத் அலி, மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் M.S.நூருல் அமீன், மயிலாடுதுறை ஒன்றிய செயலாளர் M.A.ஜெப்ருதீன், கிளை செயலாளர் இம்ரான், கிளை பொருளாளர் சல்மான் உள்ளிட்ட நீடூர்-நெய்வாசல் கிளை நிர்வாகிகள் மற்றும் மஜகவினர்கள் கலந்துக்கொண்டனர்.
தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#மஜக_மயிலாடுதுறை_மாவட்டம்
29.01.22