
திருச்சி.ஜனவரி.29., அரியலூர் மாவட்டம் வடுகப்பட்டியை சேர்ந்த 17 வயது மாணவி தஞ்சையில் உள்ள கிறிஸ்தவ பள்ளியில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக தற்கொலை செய்து கொண்டார்.
இந்த தற்கொலையை வைத்து மத மோதல்களை உண்டாக்கவும், மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கவும் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகள் தொடர்ந்து முயன்று வருகின்றன.
மாணவியின் மரணத்தை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் பாஜகவை கண்டித்து திருச்சி மாவட்ட அனைத்து ஜனநாயக இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள விக்னேஷ் ஹோட்டல் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மகஇக ஒருங்கிணைப்பாளர் தோழர் ஜீவா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்டச் செயலாளர் பேரா. மைதீன் அப்துல் காதர் கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் அந்தோணிராஜ், துணைச் செயலாளர்கள் சையது முஸ்தபா, அன்வர்தீன், முஹம்மது பீரீசா, சேக் அப்துல்லா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஷேக்மைதீன், சையது முகமது மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
நிகழ்வுக்கான ஏற்பாடுகளை வழக்கறிஞர் கென்னடி, பாடகர் கோவன், அருட்தந்தை சகாயராஜ் மற்றும் சம்சுதீன் ஆகியோர் செய்திருந்தனர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தங்களுடைய கண்டனத்தை பதிவு செய்தனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#திருச்சி_மாவட்டம்
28.01.2022