பசும்பொன் தேவர், காயிதே மில்லத் வரலாற்று பாடங்களை மீண்டும் சேர்க்க வேண்டும்..! தமிழக முதல்வரிடம் மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA நேரில் கோரிக்கை..!!

சென்னை. ஜூலை.04., இன்று காலை சட்டப்பேரவையில் உள்ள முதல்வர் அலுவலகத்தில், தமிழக முதல்வர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்களை #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.

அதில் #பசும்பொன்_முத்துராமலிங்க_தேவர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை இந்த வருடமே பாட புத்தகத்தில் சேர்க்க வேண்டுமென முக்குலத்தோர் புலிப்படை, பார்வார்டு பிளாக், நேதாஜி சுபாஷ் சேனா போன்ற அமைப்புகள் தன்னிடம் கோரிக்கை விடுத்திருப்பதாகவும் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

மேலும் #கண்ணியமிகு_காயிதே_மில்லத் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மீண்டும் பாட புத்தகத்தில் சேர்க்க வேண்டும் என்றும், இது குறித்து தான் ஏற்கனவே சட்டமன்றத்தில் பேசியிருப்பதையும் நினைவூட்டினார்.

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#சட்டப்பேரவை_வளாகம்.

1 Comment

 1. மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  சுப சுப்புராமன் தேவர்
  மாநில பொதுச்செயலாளர்
  நேதாஜி சுபாஷ் சேனை
  பெருங்களத்தூர்
  9444018941

Leave a Reply

Your email address will not be published.


*