தேனியில் மஜக துணை பொதுச்செயலாளர் மன்னை செல்லச்சாமி சுற்றுப்பயணம்!!

ஜனவரி 8 அன்று கோவை சிறை முற்றுகை போராட்டத்தை முன்னிட்டு தமிழகமெங்கும் மஜக வினர் தீவிர களப்பணியாற்றி வருகின்றனர்.

இன்று தேனி மாவட்டத்தில் மஜக துணைப் பொதுச் செயலாளர் மன்னை செல்லச்சாமி, அவர்கள் கம்பம், உத்தமபாளையம், பெரியகுளம், ஆகிய பகுதிகளில் சுற்றுப் பயணம் செய்து மஜக வினரை சந்தித்து பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

விளம்பர பணிகள், வாகன ஏற்பாடுகள், அடிப்படை பணிகளுக்கு நன்கொடை சேகரித்தல் ஆகியவை குறித்து மாவட்ட செயலாளர் கரீம், உள்ளிட்ட நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார்.

அவரது பொறுப்பில் உள்ள மதுரை,தேனி, திண்டுக்கல், மாவட்டங்களில் பெருமளவு மக்களை திரட்டும் பணியில் அவர் மாவட்ட நிர்வாகிகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறார்.

இன்று அவருடன் தேனி மாவட்ட பொருளாளர் சேக் பரீத், மாவட்ட துணை செயலாளர் அம்ஜத் மீரான், கம்பம் நகர துணைச்செயலாளர் ஷாஜஹான், கம்பம் நகர மருத்துவ சேவை அணி செயலாளர் ஷாஜஹான், உள்ளிட்டவர்களும் பங்கேற்றனர்.

#கோவையில்_திரள்வோம்
#நீதியை_வெல்வோம்
#ReleaseLongTermPrisoners

தகவல்,

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#தேனி_மாவட்டம்
02.01.2022