You are here

நாகை நாகூர் கடற்கரைகளை மேம்படுத்த வேண்டும்! மழையால் பாதித்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 25 ஆயிரம் வழங்க வேண்டும்! முதல்வரிடம் மு தமிமுன் அன்சாரி MLA நேரில் கோரிக்கை!


டிச-09,

நிவர் மற்றும் புரவி புயல் மற்றும் மழை காரணமாக பாதித்த பகுதிகளை பார்வையிட மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.எடப்பாடியார் அவர்கள் இன்று நாகை தொகுதிக்கு வருகை தந்தார்.

நாகூர் தர்ஹா குளத்தின் கிழக்கு மற்றும் வடக்கு பகுதி சுவர்கள் விழுந்ததை பார்வையிட இன்று அங்கு வருகை தந்தார்.

அவரை மு.தமிமுன் அன்சாரி MLA அவர்களும், தர்ஹா நிர்வாகத்தினரும் வரவேற்றனர்.

முதல்வருக்கு டாக்டர் KVS ஹபிப் முகம்மது எழுதிய “வேதவரிகளும், தூதர் மொழிகளும் “என்ற நூலையும், விவேகானந்தரின் பொன்மொழிகள் என்ற நூலையும் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பரிசளித்தார்.

பிறகு நாகூர் தர்ஹா நிர்வாகத்தினர் அவருக்கும், அவரோடு வருகை தந்த மாண்புமிகு அமைச்சர்கள் திரு.S.P வேலுமணி , திரு.O.S மணியன் மற்றும் திரு.டாக்டர் விஜயபாஸ்கர் ஆகியோருக்கும் பாரம்பரிய மரியாதையும், வரவேற்பும் அளித்தனர்.

பின்னர் முதல்வர் அவர்கள் பாதிக்கப்பட்ட குளத்தை பார்வையிட்டார். அப்போது தமிமுன் அன்சாரி MLA அவர்கள், இதை பேரிடர் மேலாண்மை நிவாரண நிதியிலிருந்து மறுசீரமைப்பு செய்து கொடுக்குமாறு முதல்வரிடம் கேட்டுக் கொண்டார்.

இந்த தர்ஹாவுக்கு, தான் சிறுவயதில் வந்ததாக குறிப்பிட்ட முதல்வர் அவர்கள் இதை கவனத்தில் கொள்வதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

பின்னர், நாகை மற்றும் நாகூர் கடற்கரை பகுதிகளை சிறந்த சுற்றுலாத்தலமாக மேம்படுத்த சிறப்பு நிதி ஒதுக்குமாறு முதல்வரிடம் மனு அளித்த MLA அவர்கள், மழையால் பாதித்த விளைநிலங்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 25 ஆயிரம் இழப்பீடு தர வேண்டும் என்றும் மழையில் பாதித்த வீடுகளுக்கு தலா 20 ஆயிரம் இழப்பீடு வழங்க பரிசீலிக்க வேண்டும் என்றும் கோரிக்கை மனு அளித்தார்.

நம்பியார் நகரில் மீன்பிடி இறங்கு தளத்திற்கு, சுற்றுசூழல் அனுமதி பெற்று கொடுத்ததற்காக நன்றியினையும் தெரிவித்துக் கொண்டார்.

அங்கு வந்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம், நாகூர் மருத்துவமனையை தரம் உயர்த்தி தருமாறும், திட்டச்சேரி ஆரம்ப சுகாதார நிலையத்தை 30 படுக்கைகளுடன் தரம் உயர்த்தி தருமாறும் கேட்டுக் கொண்டார்.

அமைச்சர் S.P வேலுமணி அவர்களிடம் நாகை நகராட்சி மேம்பாடு குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததற்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

தர்ஹா வாசலில் பல்வேறு அரசியல் கட்சியினரும், சமூக அமைப்பினரும் முதல்வரிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் திரு .பிரவீன் நாயர், மத்திய மண்டல ஐ.ஜி திரு.ஜெயராம் IPS , நகராட்சி ஆணையர் திரு. ஏகராஜ் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளும் உடனிருந்தனர்.

மாநில துணைச் செயலாளர் நாகை முபாரக், மாவட்ட பொருளாளர் சதக்கத்துல்லா, மாவட்ட துணைச் செயலாளர் சாகுல் ஹமீது, நாகூர் நகர செயலாளர் அபுசாலிஹ், IT WING நிசாத், தமீஜுதீன், மாலிக் மற்றும் மஜக பேரிடர் மீட்பு குழுவினரும் கலந்து கொண்டனர்.

தகவல்,
#நாகை_சட்டமன்ற_உறுப்பினர்_அலுவலகம்.

Top