வேலூர் மாவட்ட குடியாத்தம் நகர மனிதநேய ஜனநாயக கட்சியின் மருத்துவ சேவை அணியின் சார்பில் தொடர்ந்து மருத்துவ உதவிகளும், அவசர கால இரத்ததான சேவைகளும் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் குடியாத்தம் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் அலுவலகத்தில் சிறந்த இரத்ததான சேவைக்கான சான்றிதழை மனிதநேய ஜனநாயக கட்சிக்கு தலைமை மருத்துவ அதிகாரி ஆர்.ஹேமலதா அவர்கள் வழங்கி பாராட்டினார்.
சான்றிதழை மனிதநேய ஜனநாயக கட்சியின் நகர செயலாளர் S.அனீஸ், மாவட்ட இளைஞர் அணி பொருளாளர் S.M.நிஜ்ஜாமுத்தீன்,மருத்துவ சேவை அணி செயலாளர்கள் சாதிக் பாஷா,முஹம்மத் உசேன் ஆகியோர் பெற்றுக் கொண்டார்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#வேலூர்_மாவட்டம்
03.08.2021