சீரமைக்கப்படும் நாகை மரைக்காயர் குளம் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரிபார்வையிட்டார்!

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் நாகைக்கு வருகை தந்தார்.

அப்போது நாகை முஸ்லிம் ஜமாத் அலுவலகத்திற்கு அழைப்பின் பேரில் வருகை தந்தார்.

அங்கு ஜமாத்தினர் வரவேற்பு அளித்து அவருடன் உரையாடினர்.

பிறகு அவர் MLA வாக இருந்த போது, அவரது முயற்சியில், ONGC மூலம் சேவை நிதியில், சீரமைக்கப்பட்ட குளத்தை பார்வையிட்டார்.

காலை நேரத்தில் பெண்கள் நடைபயிற்சி செய்யவும், மாலை நேரங்களில் இருபாலரும் குடும்பத்துடன் பொழுது போக்கும் வகையிலும் இக்குளம் சீரமைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இது குறித்த அவரது ஆலோசனைகளையும் ஜமாத்தினரிடம் கூறினார்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#நாகை_மாவட்டம்.