மனிதநேய ஜனநாயக கட்சியின் முன்னாள் மாநில துணைச் செயலாளர் வாணியம்பாடி வசீம் அக்ரம் அவர்கள் இன்று மாலை கொடூரமான முறையில் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். இதை வன்மையாக கண்டிக்கிறோம். அவர் அப்பகுதியில் வாழும் மக்களின் நலன்களுக்காக தொடர்ந்து பல சேவைகளை ஆற்றி வந்தவர். அம்மாவட்ட மக்களால் நன்கு அறியப்பட்டவர். மஜக-வின் பல்வேறு அரசியல் பணிகளில் துடிப்போடு பங்கேற்று செயலாற்றியவர். இன்று அவர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார் என்ற செய்தி பெரும் துயரத்தை தருகிறது. காவல்துறை துரிதமாக செயல்பட்டு உண்மை குற்றவாளிகளை கைது செய்து சட்டத்தின் முன்பு நிறுத்த வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், கட்சியினர், அவ்வூர் மக்கள் அனைவருக்கும் எமது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம். அவரது மறு உலக வாழ்வு சிறக்க பிரார்த்திக்கிறோம். இவண், மு.தமிமுன் அன்சாரி, #பொதுச்செயலாளர், #மனிதநேய_ஜனநாயக_கட்சி 10.09.2021
பொதுச்செயலாளர் மு. தமிமுன் அன்சாரி
வக்பு வாரிய தலைவர் மஜக தலைமையகம் வருகை!
சென்னை.செப்.2., தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் ஜனாப் அப்துல் ரஹ்மான் அவர்கள் மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமையகத்திற்கு வருகை தந்தார். அவரை பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் வரவேற்று மைக்கேல் ஹார்ட் எழுதிய 'புதிய வரலாறு படைத்தோரின் வரிசை முறை 100 பேர்' என்ற நூலை பரிசளித்தார். அப்போது தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலா.நாசர், துணைப் பொதுச் செயலாளர் தைமிய்யா ஆகியோரும் உடனிருந்தனர். அவருடன் பிறைமேடை செய்தி ஆசிரியர் காயல் மஹபூப் அவர்களும் வருகை தந்திருந்தார். சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக இச்சந்திப்பு நடைப்பெற்றது. வக்பு வாரியத்தின் எதிர்கால செயல் திட்டங்கள், காத்திருக்கும் சவால்கள் குறித்து ஜனாப். அப்துல் ரஹ்மான் அவர்கள் விளக்கினார். வக்பு வாரியம் சார்பில் கல்வி நிறுவனங்களை தொடங்குவது குறித்த ஆலோசனை மஜக சார்பில் எடுத்துரைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாநில துணைச் செயலாளர்கள் புதுமடம் அனிஸ், பொறியாளர் சைபுல்லாஹ், துரை முகம்மது, இளைஞர் அணி செயலாளர் அசாருதீன், மருத்துவ சேவை அணி செயலாளர் அப்துல் ரஹ்மான், IKP மாநில செயலாளர் கோவை இஷாக் உள்ளிட்ட மஜக-வினரும் உடனிருந்தனர். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #தலைமையகம் 02.09.2021
MKP கத்தார் மண்டலம் சார்பில் 75வது இந்திய சுதந்திர தின சிறப்பு காணொளி கருத்தரங்கம்..! மஜக பொதுச்செயலாளர் கலந்துகொண்டு சிறப்புரை..!!
கத்தார். ஆக.22., மனிதநேய கலாச்சார பேரவை (MKP) கத்தார் மண்டலரம் சார்பாக 75ஆம் ஆண்டு "சுதந்திர தின" பவளவிழா Zoom காணோலி நிகழ்ச்சி கடந்த 20.08.21 வெள்ளிக்கிழமை கத்தார் நேரப்படி மாலை 6.30 மணியளவில் கத்தார் மண்டல செயலாளர் ஆயங்குடி முஹம்மது யாசின் தலைமையில் நடைபெற்றது. ஜலாலுதீன் இம்தாதி அவர்கள் பாடிய சுதந்திர தின தியாக பாடலுடன் தொடங்கப்பட்டது. அதன் தொடக்கமாக கத்தார் மண்டல பொருளாளர் திருப்பத்தூர் நிசார் அகமது அவர்கள் தொகுப்புரை வழங்கினார். மண்டல துணைச்செயலாளர் பரங்கிபேட்டை அப்துல் ரசாக் அவர்கள் அனைவரையும் வரவேற்றுப் வரவேற்புரை வழங்கினார். அதனை தொடந்து முன்னால் துணைச்செயலாளர் புதுமடம் பைசல் அவர்கள் கத்தார் மண்டல செயல்பாடுகள் மற்றும் சாதனைகளை பட்டியலிட்டு சிறப்பாக அறிமுக உரை நிகழ்த்தினார். அதனை தொடர்ந்து இந்நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MA, Ex. MLA அவர்கள் கலந்துக்கொண்டு "பாசிசமும் சுதந்திர" போராட்டமும் என்ற தலைப்பில் சிறப்புரை வழங்கினார்கள். அதனை தொடர்ந்து சிறப்பு அழைப்பாளர் மே-17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் "சுதந்திர போரில் திப்புசுல்த்தான்" என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். மாநில
மஜக இல்ல மணவிழா! பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்பு!
நாகை மாவட்ட மஜக இளைஞரணி செயலாளர் ரிஸ்வான் @ S.செய்யது அஹமது M.B.A., அவர்களுக்கும், மணமகள் M.சலாமுன்னிசா B.Sc., (IT) அவர்களுக்கும் இன்று திருமணம் திட்டச்சேரியில் நடைப்பெற்றது. இதில் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். உடன் மாநில துணைச் செயலாளர் நாகை முபாரக், தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில பொருளாளர் A.H.M ஹமீது ஜெகபர், மாவட்ட செயலாளர் திட்டச்சேரி ரியாஸ், பொருளாளர் S.சதக்கத்துல்லாஹ், தலைமை செயற்குழு உறுப்பினர் அ.ஷேக்மன்சூர், IT Wing மாவட்ட செயலாளர் சுல்தான், திட்டச்சேரி பேரூர் செயலாளர் இப்ராஹீம், நிர்வாகிகள் பேபிஷாப் பகுருதீன், நிசார், ஆதினங்குடி சாகுல், பிரவீன், மஞ்சை சதாம் உள்பட ஒன்றிய, பேரூர் நிர்வாகிகளும், செயல்வீரர்களும் திரளாக கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #நாகை_மாவட்டம்.
வக்பு வாரியத் தலைவர் இல்ல திருமணம்.. மஜக பொதுச்செயலாளர் மற்றும் தலைமை நிர்வாகிகள் பங்கேற்பு!
வக்பு வாரிய தலைவர் அப்துல் ரஹ்மான் அவர்களின் மகன் சித்திக் அகமது அவர்களுக்கும், மணமகள் ஆயிஷா நஸ்ரின் அவர்களுக்கும் இன்று திருமணம் நடைபெற்றது. இதில் மனதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்றார். அவருடன் பொருளாளர் ஹாருண் ரசீது, துணைப் பொதுச் செயலாளர் தைமிய்யா மாநில செயலாளர் நாச்சிக்குளம். தாஜ்தீன் ஆகியோரும் பங்கேற்றனர். மேலும் மாநில துணைச் செயலாளர்கள் அனிஸ், ஷமீம், பல்லாவரம் ஷஃபி, நாகை முபாரக், இளைஞர் அணி செயலாளர் அசாருதீன், மருத்துவ சேவை அணி செயலாளர் அப்துல் ரஹ்மான், மனித உரிமை அணி செயலாளர் சலீம் ஆகியோரும் உடன் சென்றனர். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #தலைமையகம் 21.08.2021