ஜன.11., மனிதநேய ஜனநாயக கட்சி தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகர மருத்துவ சேவை அணியின் சார்பில் தொடர்ந்து இரத்ததானம் மருத்துவ உதவி மற்றும் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் ஆகிய பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது. மஜக வின் இந்த சேவைகளை பாராட்டி சங்கரன் கோவில் APJ.அப்துல்கலாம், ட்ரஸ்ட் சார்பில் சிறப்பு செய்யப்பட்டு சங்கரன் கோவில் அரசு மருத்துவர் அன்னராஜ், அவர்கள் மஜக நிர்வாகிகளுக்கு விருது வழங்கி கெளரவித்தார். இதில் மனித உரிமை அணி மாவட்ட செயலாளர் சங்கை பீர் மைதீன், மற்றும் சங்கரன் கோவில் நகர துணைச் செயலாளர் மாலிக், ஆகியோர் விருதைப் பெற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKITWING #தென்காசி_மாவட்டம் 10.01.2021
மஜக மருத்துவ சேவை அணி
மஜக மருத்துவ சேவை அணி
மஜக நெல்லை மாவட்ட மருத்துவ சேவை அணி சார்பாக இலவச மருத்துவ முகாம்..!
நெல்லை.ஜன.03., மனிதநேய ஜனநாயக கட்சியின் நெல்லை மாவட்ட மருத்துவ சேவை அணி, பெஜான்சிங் கண்மருத்துவமனை, திரவியம் எலும்புமுறிவு மருத்துவமனை, பொன்ரா மல்டி ஸ்பசாலிடி மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் பேட்டை கலம் நர்சரி & பிரைமரி பள்ளியில் இன்று நடைபெற்றது. இம்முகாமில் கண் சிகிச்சைகள், எலும்பு சம்பந்தப்பட்ட சிகிச்சைகள், மேலும் பொது மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான சிகிச்சைகளும், ஆலோசனைகளும் வழங்கப்பட்டது. மேலும் கண் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களுக்கு இலவசமாக அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்வுக்கு நெல்லை மாவட்ட மருத்துவசேவை அணி செயலாளர் புகாரி தலைமை தாங்கினார், நெல்லை மாவட்ட பொருளாளர் பேட்டை மூசா முகாமை துவங்கி வைத்தார், சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட செயலாளர் நெல்லை நிஜாம், மாவட்ட துணை செயலாளர் காயல் A1 மைதீன், கலம் பள்ளி தாளாளர் சேக் முஹம்மது அலி, பேட்டை வியாபாரிகள் சங்க துணைதலைவர் M.காமாட்சிநாதன், அமமுக சாகுல் (AC), மாவட்ட அணி நிர்வாகிகள் அப்பாஸ், முருகேசன், அப்துல்லா, ஜாஹிர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். முகாமிற்கான ஏற்பாடுகளை பேட்டை நகர நிர்வாகிகள் ஐடிஐ.சங்கர், அசன்கனி, மூர்த்தி, சம்சுதீன்,ஆதிமூலம், செந்தில் ஆகியோர் சிறப்பான
தமிழகத்தை சேர்ந்த பிலிப்பைன்ஸ் மாணவர்களும் ஈரான் மீனவர்களும் மீட்கப் படுவார்களா.? கவன ஈர்ப்பு தீர்மானம் மூலம் சட்ட சபையில் முதமி முன் அன்சாரி MLA கேள்வி.!
இன்று சட்டசபையில் நேரமில்லா நேரத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்கள், விதி 55-ன் கீழ், சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்றை கொண்டு வந்து பேசினார். கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளை பாதித்தது போல் ஆசியான் எனப்படும் தென்கிழக்கு ஆசிய நாடுகளையும் பாதித்திருக்கிறது. வரலாற்றில் முதல் முறையாக சிங்கப்பூர் மலேசியா எல்லை மூடப்பட்டிருக்கிறது. பிலிப்பைன்ஸ்க்கு மருத்துவம் படிக்க சென்ற தமிழக மாணவர்கள் நேரடி விமான சேவை இல்லாததால் நாடு திரும்பும் வழியில், மலேசிய தலைநகர் கோலாலம்பூர் விமான நிலையத்தில் தவிப்பதாக சமூக இணையதளங்கள் வழியாக அறிகிறோம். அவர்களுக்கு அங்கு விமான நிலையத்தில் தங்க பாதுகாப்பான ஏற்பாடுகளை நமது இந்திய வெளியுறவுத்துறை செய்திருக்கிறதா? இதுகுறித்து தமிழக அரசு மத்திய அரசிடம் பேசி இருக்கிறதா? என்பதை அறிய விரும்புகிறேன். அதுபோல் நாகப்பட்டினம், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த தமிழக மீனவர்கள் ஈரான் நாட்டு கடல் எல்லையில் சிக்கித் தவிப்பதாக அறிகிறோம். அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுகிறதா?அவர்கள் குடும்பத்தினருக்கு உரிய தகவல் சொல்லப்பட்டிருக்கிறதா? என்பதையும் தங்கள் வாயிலாக அரசிடம் கேட்டு அமர்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். இதே கேள்வியையொட்டி பேசிய உறுப்பினர்கள்
திருவண்ணாமலை மாவட்டத்தில் மஜகவின் மனிதநேய பணி..!
செங்கம். ஆக.26., திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் பக்கிரி பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் வசிக்கும் சகோதரர் ஒருவரது உடல் நிலை சரியில்லாத காரணத்தால் அவருக்கு இரண்டு மாதங்களுக்கு தேவையான மளிகை பொருட்கள் மற்றும் நிதி உதவி அளிக்கப்பட்டது. மேலும் இவரது உடல்நிலை மிகவும் ஆபத்தான கட்டத்தில் உள்ளது இவருக்கு மேல் சிகிச்சை அளிப்பதற்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிப்பதற்கான உதவிகளை செய்ய மனிதநேய ஜனநாயக கட்சியின் முக்கிய நிர்வாகிகள் முன்வந்துள்ளனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK _IT_WING #மஜக_திருவண்ணாமலை_மாவட்டம்.
வீரசோழனில் மஜக ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு ! அர்ப்பணிக்கும் போதே அழைப் வந்ததால் உடனே விரைவு !
விருதுநகர். ஆக.18., விருதுநகர் வடக்கு மாவட்டம் #வீரசோழன் #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் 5வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி பொதுக் கூட்ட்த்துடன் நேற்று (17.08.2018) மாலை எழுச்சியாக நடைப்பெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக #நேதாஜி_சுபாஷ்_சேனா கட்சியின் தலைவர் வழக்கறிஞர்.மகாதேவன் கலந்து கொண்டார். அவர் பேசும் போது மஜகவின் அரசியல் , சமூக அணுகுமுறைகளை பாராட்டி பேசினார். எல்லா சமூக மக்களின் பிரச்சனைகளுக்காகவும் சட்டசபையில் மஜக பொதுச் செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA குரல் கொடுப்பதாகவும் பாராட்டி பேசினார். முஸ்லிம்களும், தேவர் சமூக மக்களும் ஒரே மாதிரியாக பாதிக்கப்படுவதாவும், நாம் இரட்டைக் குழல் துப்பாக்கியாக செயல்பட வேண்டும் என்றும் பேசினார்., அ.ம.மு.க மாவட்ட செயலாளர் இன்பத் தமிழன் பேசும்போது, தனது தந்தை தாமரைக்கனிக்கும், தனது தலைவர் TTV . தினகரனுக்கும் தமிமுன் அன்சாரி நண்பர் என்றும் கூறி மகிழ்ந்தவர், மன்னர் ஒளரங்கசீப் பின் நேர்மையான ஆட்சி முறை குறித்து சிலாகித்து பேசினார். தனது தந்தை ஷாஜஹானின் இறுதி சடஙகை அரசு செலவில் செய்யாமல், தனது சொந்த செலவில் செய்ததை வரலாற்று குறிப் போடு பேசினார்., மாநிலச் செயலாளர் நாச்சிக்குளம்.தாஜுதீன் பேசும் போது இந்த ஆம்புலன்ஸ் அனைத்து சமூக மக்களின்