மஜகவின் மருத்துவ சேவையை பாராட்டி விருது!!


ஜன.11.,

மனிதநேய ஜனநாயக கட்சி தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகர மருத்துவ சேவை அணியின் சார்பில் தொடர்ந்து இரத்ததானம் மருத்துவ உதவி மற்றும் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் ஆகிய பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

மஜக வின் இந்த சேவைகளை பாராட்டி சங்கரன் கோவில் APJ.அப்துல்கலாம், ட்ரஸ்ட் சார்பில் சிறப்பு செய்யப்பட்டு சங்கரன் கோவில் அரசு மருத்துவர் அன்னராஜ், அவர்கள் மஜக நிர்வாகிகளுக்கு விருது வழங்கி கெளரவித்தார்.

இதில் மனித உரிமை அணி மாவட்ட செயலாளர் சங்கை பீர் மைதீன், மற்றும் சங்கரன் கோவில் நகர துணைச் செயலாளர் மாலிக், ஆகியோர் விருதைப் பெற்றனர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKITWING
#தென்காசி_மாவட்டம்
10.01.2021