ஜன.11,
திருவாரூர் மாவட்டம் பொதக்குடி, அத்திக்கடை, திருவாரூர், கூத்தாநல்லூர் ஆகிய இடங்களில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., வருகை தந்தார்.
பொதக்குடியில் நடைப்பெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது…
நாட்டுக்காக எல்லையில் போராடி உயிர்நீக்கும் ராணுவ வீரர்களின் தியாகங்களை போற்றுகிறோம். துடிக்கிறோம். அவர்கள் நம்மை எதிரி நாடுகளிடமிருந்து பாதுகாக்க உயிர் துறக்கிறார்கள். அதுபோலவே, நாம் வாழ வேண்டும் என்பதற்காக உழைப்பவர்கள் விவசாயிகள்.
அவர்கள் மத்திய அரசின் சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து கொடும் பணியிலும், மழையிலும் போராடுகிறார்கள். 46 நாட்களில் 64 விவசாயிகள் போராடி உயிர் தியாகம் செய்திருக்கிறார்கள். நமக்காக, நாட்டுக்காக அவர்கள் தியாகிகளாக இருக்கிறார்கள். பிரதமர் மோடி சர்வாதிகாரமாக இப்பிரச்சனையை அணுகாமல் மனிதாபிமானத்தோடு அணுக வேண்டும்.
விவசாயிகளின் உயிர் தியாகங்களை, போராடும் உறுதியை உலகமே பார்த்து வியக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார். அரசியல் நிலைபாடுகள் குறித்த கேள்விகளுக்கு ஜனவரி 23 அன்று நெல்லை தலைமை செயற்குழுவில் முடிவு செய்யப்படும் என்றார்.
முன்னதாக பொதக்குடியில் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். அப்போது ஏராளமான புதியவர்கள் தங்களை மஜகவில் இணைத்துக் கொண்டனர்.
இந்நிகழ்வில், மாவட்ட செயலாளர் சீனி ஜெகபர் சாதிக், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெய்னுதீன், மாவட்ட துணைச் செயலாளர் நத்தர்கனி, மனிதநேய ஜனநாயக வணிகர் சங்க (MJVS) மாவட்ட செயலாளர் ஜம்ஜம் சாகுல், ஒன்றிய செயலாளர் ஜலால், கிளை செயலாளர் முனவர் ஹசன், பொருளாளர் A.ஜலாலுதீன், துணைச் செயலாளர் ராசீத் உள்ளிட்ட மஜகவினர் திரளாக கலந்து கொண்டனர்.
தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#திருவாரூர்_மாவட்டம்.
10.01.2021