கோவை:மார்ச்.18.,
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி அவர்கள், மஜக மாவட்ட தலைமையகம் வருகை புரிந்தார்.
வேட்பாளரை மாவட்ட செயலாளர் MH. அப்பாஸ் அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் வரவேற்று சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
பிறகு நிர்வாகிகளிடம் பேசிய வேட்பாளர்கள் மதச்சார்பற்ற சக்திகளின் வாக்குகள் பிரிந்து விடக்கூடாது என்பதற்காக மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்ததற்கு நன்றி தெரிவித்தனர்.
மேலும் உங்களின் ஆதரவால் நாங்கள் நிச்சயம் வெற்றி பெற்று மக்கள் நல பணியாற்றுவோம் என்று நிர்வாகிகள் மத்தியில் தெரிவித்தனர்.
இச்சந்திப்பில் தொழிற்சங்க மாநில செயலாளர் கோவை MH.ஜாபர்அலி, மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர்கள் ATR.பதுருதீன், சிங்கை சுலைமான், மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பகுதி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#TNElection2021
#கோவை_மாநகர்_மாவட்டம்
17.03.2021