நெல்லை.ஜன.03.,
மனிதநேய ஜனநாயக கட்சியின் நெல்லை மாவட்ட மருத்துவ சேவை அணி, பெஜான்சிங் கண்மருத்துவமனை, திரவியம் எலும்புமுறிவு மருத்துவமனை, பொன்ரா மல்டி ஸ்பசாலிடி மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் பேட்டை கலம் நர்சரி & பிரைமரி பள்ளியில் இன்று நடைபெற்றது.
இம்முகாமில் கண் சிகிச்சைகள், எலும்பு சம்பந்தப்பட்ட சிகிச்சைகள், மேலும் பொது மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான சிகிச்சைகளும், ஆலோசனைகளும் வழங்கப்பட்டது. மேலும் கண் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களுக்கு இலவசமாக அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிகழ்வுக்கு நெல்லை மாவட்ட மருத்துவசேவை அணி செயலாளர் புகாரி தலைமை தாங்கினார், நெல்லை மாவட்ட பொருளாளர் பேட்டை மூசா முகாமை துவங்கி வைத்தார், சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட செயலாளர் நெல்லை நிஜாம், மாவட்ட துணை செயலாளர் காயல் A1 மைதீன், கலம் பள்ளி தாளாளர் சேக் முஹம்மது அலி, பேட்டை வியாபாரிகள் சங்க துணைதலைவர் M.காமாட்சிநாதன், அமமுக சாகுல் (AC), மாவட்ட அணி நிர்வாகிகள் அப்பாஸ், முருகேசன், அப்துல்லா, ஜாஹிர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
முகாமிற்கான ஏற்பாடுகளை பேட்டை நகர நிர்வாகிகள் ஐடிஐ.சங்கர், அசன்கனி, மூர்த்தி, சம்சுதீன்,ஆதிமூலம், செந்தில் ஆகியோர் சிறப்பான ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.
முகாமில் கலந்து கொண்டு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அனைவருக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் நெல்லை மாவட்டம் சார்பாக நினைவு கேடயம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இம்முகாமில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#நெல்லை_மாவட்டம்
03-01-2021