தூத்துக்குடி வடக்கில் மஜக உறுப்பினர் சேர்க்கை முகாம்! மாநில துணைச் செயலாளர் சாகுல் ஹமீது துவக்கி வைத்தார்!


தூத்துக்குடி:ஜன04.,

மனிதநேய ஜனநாயக கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்டம் கயத்தாறு ஒன்றியத்திற்குட்பட்ட அய்யனார் ஊத்து கிளையின் சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

மஜக வின் அய்யனார் ஊத்து கிளை செயலாளர் செய்யது அலி, அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாநில துணைச் செயலாளர் சாகுல் ஹமீது, அவர்கள் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று உறுப்பினர் சேர்க்கை முகாமை துவக்கி வைத்தார்.

இம்முகாமில் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் பெரியவர்கள் என பலரும் ஆர்வத்தோடு வந்து உறுப்பினர் படிவத்தில் கையெழுத்திட்டு மஜக வின் சேவை அரசியலில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

இந்நிகழ்வில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் முகமது, தாரிக், சதாம் உசேன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட துணை செயலாளர் முகமது நஜிப், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் மீராசாஹிப், முஜிபுர் ரஹ்மான், மற்றும் மானங்காத்தான் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை அய்யனாரூத்து கிளை பொருளாளர் சாகுல் ஹமீது, தலைமையில் துணை செயலாளர்கள் செய்யது இப்ராகிம், மைதீன், மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#தூத்துக்குடி_வடக்கு_மாவட்டம்
03.01.2020