குடியரசு தின வாழ்த்துக்கள்!

(மனிதநேய ஜனநாயக கட்சி
பொதுச்செயலாளர்
M. தமிமுன் அன்சாரி MLA வெளியிட்டுள்ள பத்திரிக்கை அறிக்கை)

இந்தியாவின் 68 வது குடியரசு தினம் நாளை கொண்டாடப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. உலகிலேயே மிகச் சிறந்த ஜனநாயக நாடுகளில் நாமும் இடம் பெற்றிருக்கின்றோம் என்பது மன நிறைவு தருகிறது.
வேற்றுமையில் ஒற்றுமை என்ற கொள்கை அடிப்படையில் நம்நாடு அனைவரையும் இணைத்திருக்கிறது.

மதவெறி, சாதி வெறி, வன்முறைகள், பயங்கரவாதம்  ஆகியவற்றை கடந்து நாம் முன்னேறிக் கொண்டிருக்கிறோம்.
இந்நாளில் மக்களை பிளவுப்படுத்தும் தீய சக்திகளுக்கு எதிராக ஒன்றுபட்டு நாட்டின் முன்னேற்றத்திற்க்குபாடுபட உறுதி ஏற்ப்போம்.
நாட்டு மக்கள் அனைவருக்கும் எமது குடியரசு தின வாழ்த்துக்கள்.

இவண்,
M. தமிமுன் அன்சாரி M L A.,
பொதுச்செயலாளர்  மனிதநேய ஜனநாயக கட்சி.