#மஜக_மாநில_பொருளாளர்_எஸ்_எஸ்_ஹாருன்ரசீது_ஆறுதல்..! நெய்வேலி மஸ்ஜித் ரஹ்மத் பள்ளியின் தலைவர் S.M அபூபக்கர் சித்திக், அவரது மகன் SMA கமர் அவர்களும் சமீபத்தில் மரணம் அடைந்தனர். அவரது இல்லத்திற்கு மஜக மாநில பொருளாளர் எஸ்எஸ் ஹாரூன் ரசிது நேரில் சென்று ஆறுதல் கூறினார். இந்நிகழ்வில் மாநில துணை செயலாளர் இப்ராஹிம், தலைமை செயற்குழு உறுப்பினர் அபுதாஹீர், நெய்வேலி நகர செயலாளர் நூர் முஹம்மது, ஒன்றிய செயலாளர் ராஜா, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் பாபர் அலி, நகர பொருளாளர் ஜாஹிர் ஹீசைன், ஒன்றிய துணை செயலாளர் ஆதம், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் மன்சூர் உள்ளிட்டோர் உடனிருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #கடலூர்_வடக்கு_மாவட்டம்.
மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருண் ரஷீத்
கொரோனா ஒழிந்து உலகம் இயல்பு நிலைக்கு திரும்ப பிரார்த்திப்போம்!!
மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ரமலான் நோன்பு பெருநாள் வாழ்த்து செய்தி!! உலகின் மற்றுமொரு திருநாளாக 'ஈதுல் பித்ர்' எனும் நோன்புப் பெருநாள் மலர்ந்திருக்கிறது. உலகப் பொதுமறையான திருக்குர்ஆன் அருளப்பட்ட புனித ரமலான் மாதத்தில் இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டாக 30 நாட்கள் நோன்பு இருந்து அதன் நிறைவாக உலகமெங்கும் வாழும் 200 கோடிக்கும் அதிகமான மக்கள் இப் பெருநாளை கொண்டாடி மகிழ்கிறார்கள். பசியின் கொடுமையை உணரும் வகையிலும்;பிறர் பசியை போக்கிட வேண்டும் என்ற எண்ணத்தை பெறும் வகையிலும் ஒரு சொட்டு தண்ணீர் கூட அருந்தாமல் இறை வழிபாட்டோடு நகரும் இந்த நாட்கள் உணர்வுபூர்வமானவை! நிறைவாக பெருநாளை கொண்டாடி மகிழ வான்பிறையை எதிர்நோக்கும் நிமிடங்கள் அழகானவை! ஆனால் அந்த உற்சாகத்தை வழக்கம் போல கொண்டாட முடியாத சூழலில் நாம் இருக்கி றோம். கொரணா பெருந்தொற்றின் காரணமாக குடும்பத்தினரோடும், பல் சமூக நண்பர்களோடும் இப்பெருநாளை கொண்டாடி மகிழும் நிலையில் தற்போதைய சூழல் இல்லை என்பது வருத்தத்துக்குரிய உண்மையாகும். சென்ற ஆண்டைப் போலவே இவ்வாண்டும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகம் பரவுகின்ற நிலையில்; அவரவர் இல்லங்களிலேயே தொழுது விட்டு மகிழ்ச்சியினை கட்டுப்பாட்டோடு வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம்
மஜக தலைமையகத்திற்கு தி.வேல்முருகன் MLA வருகை.!
சென்னை.மே.05., மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமையகத்திற்கு தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன் MLA., அவர்கள் இன்று வருகை தந்து. பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்களுக்கு சால்வை அணிவித்து நன்றி கூறினார். அப்போது பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, துணைப் பொதுச் செயலாளர் என்.ஏ.தைமிய்யா ஆகியோர் உடனிருந்தனர். தனது வெற்றிக்கு மஜக-வினர் தீவிரமாக களப்பணியாற்றிதை குறிப்பிட்டு, அவர்களது உழைப்பு மறக்க முடியாதது என்றார். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #தலைமையகம் 05.05.2021
பாஜக ஆட்சியை அகற்றி மதச்சார்பற்ற சமூக நீதி சக்திகளை ஆட்சியில் அமர்த்துவோம்! மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA பிரகடனம்!
சென்னை.பிப்.28., 2019 - நாடாளுமன்ற தேர்தலில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தேர்தல் நிலைப்பாடு குறித்து விவாதிக்க இன்று கட்சியின் சிறப்பு நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. அதன் நிறைவாக தலைமை நிர்வாகக் குழு கூட்டத்தில் தீர்மானம் இறுதி வடிவம் பெற்றது. இன்று மாலை கட்சியின் நான்காம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் சென்னை மண்ணடியில் நடைப்பெற்றது. அதில் அந்த தீர்மானத்தை பெருத்த ஆராவரத்திற்கிடையே கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அறிவித்தார். அந்த தீர்மானம் பின்வருமாறு... இந்திய திருநாட்டை பாசிஸ்டுகளின் கட்டுப்பாட்டிலிருந்து மீட்க வேண்டிய கட்டாயத்தில் வரும் நாடாளுமன்றத் தேர்தலை நாடு சந்திக்கிறது. மீண்டும் பாஜக ஆட்சியை பிடித்தால், ஜனநாயகம், நீதிமன்றம், அரசியல் சட்ட அமைப்பு, சமூகநீதி, மதச்சார்பின்மை, மாநிலங்களின் உரிமைகள், கல்வி அமைப்புகள், ஆகியவை முற்றிலுமாக சீர்குலைக்கப்படும் அபாயம் இருக்கிறது. மேலும், கடந்த 5 ஆண்டு காலத்தில் தமிழக நலன்களுக்கு எதிராகவே மத்திய பாஜக அரசு செயல்பட்டு வந்திருக்கிறது. அந்த வகையில் பாஜகவின் வளர்ச்சி என்பது தமிழகத்திற்கும், திராவிட - தமிழ் தேசிய அரசியலுக்கும் பேராபத்தை விளைவிக்கும் என்பதையும் சான்றோர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர். இவை அனைத்தையும் மஜக உன்னிப்பாக கவனித்து , இத்தேர்தலை நுட்பமாக எதிர்கொள்ள வேண்டும் என
டிசம்பர்.06, தஞ்சை இராணுவ விமானப் படைதளம் முற்றுகை..! மஜக டெல்டா மண்டல ஆலோசனைக் கூட்டம்…!
க ுடந்தை.நவ.12., மனிதநேய ஜனநாயக கட்சியின் டெல்டா மண்டல ஆலோசனைக் கூட்டம் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் மதுக்கூர் K.இராவுத்தர்ஷா தலைமையில் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில், தஞ்சையில் டிசம்பர் 06 அன்று மஜக வின் மாநில பொருளாளர் எஸ்.எஸ். ஹாரூன் ரசீது தலைமையில் நடைப்பெற உள்ள இராணுவ விமானப் படைதள முற்றுகை போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது குறித்து மாநில செயலாளர்கள் நாச்சிகுளம் தாஜுதீன், திருபுவனம்.H.ராசுதீன், விவசாய அணி மாநில செயலாளர் நாகை.N.S.முபாரக், தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில பொருளாளர் A.H.M ஹமீது ஜெகபர், கொள்கை விளக்க அணி மாநில துணைச் செயலாளர் A.காதர்பாட்ஷா ஆலோசனை வழங்கி உரையாற்றினர். மாவட்ட செயலாளர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துக்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு போராட்டகளத்திற்கு பெருமளவில் மக்களை திரட்டுவது என்ற உத்வேகத்துடன் இக்கூட்டம் நிறைவு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் தஞ்சை (மாநகர்/வடக்கு/தெற்கு),திருவாரூர், நாகை (வடக்கு/தெற்கு) மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டர்கள். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #டெல்டா_மண்டலம். 11.11.18