சென்னை.பிப்.28., 2019 – நாடாளுமன்ற தேர்தலில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தேர்தல் நிலைப்பாடு குறித்து விவாதிக்க இன்று கட்சியின் சிறப்பு நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. அதன் நிறைவாக தலைமை நிர்வாகக் குழு கூட்டத்தில் தீர்மானம் இறுதி வடிவம் பெற்றது.
இன்று மாலை கட்சியின் நான்காம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் சென்னை மண்ணடியில் நடைப்பெற்றது.
அதில் அந்த தீர்மானத்தை பெருத்த ஆராவரத்திற்கிடையே கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அறிவித்தார்.
அந்த தீர்மானம் பின்வருமாறு…
இந்திய திருநாட்டை பாசிஸ்டுகளின் கட்டுப்பாட்டிலிருந்து மீட்க வேண்டிய கட்டாயத்தில் வரும் நாடாளுமன்றத் தேர்தலை நாடு சந்திக்கிறது.
மீண்டும் பாஜக ஆட்சியை பிடித்தால், ஜனநாயகம், நீதிமன்றம், அரசியல் சட்ட அமைப்பு, சமூகநீதி, மதச்சார்பின்மை, மாநிலங்களின் உரிமைகள், கல்வி அமைப்புகள், ஆகியவை முற்றிலுமாக சீர்குலைக்கப்படும் அபாயம் இருக்கிறது.
மேலும், கடந்த 5 ஆண்டு காலத்தில் தமிழக நலன்களுக்கு எதிராகவே மத்திய பாஜக அரசு செயல்பட்டு வந்திருக்கிறது. அந்த வகையில் பாஜகவின் வளர்ச்சி என்பது தமிழகத்திற்கும், திராவிட – தமிழ் தேசிய அரசியலுக்கும் பேராபத்தை விளைவிக்கும் என்பதையும் சான்றோர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
இவை அனைத்தையும் மஜக உன்னிப்பாக கவனித்து , இத்தேர்தலை நுட்பமாக எதிர்கொள்ள வேண்டும் என நினைக்கிறது.
அந்த வகையில் தனித்து தேர்தலில் நிற்பதோ, தனி அணியை உருவாக்குவதோ, பாஜக எதிர்ப்பு வாக்குகளை சிதறடித்து விடும் என மஜக அஞ்சுகிறது.
நாடெங்கிலும் பாஜக எதிர்ப்பலை வீசுவதையும், அதற்கு மாற்றாக, காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற- சமூகநீதி கட்சிகள் தலைமையில் மத்தியில் புதிய ஆட்சி அமைய வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி வருவதையும் உணர முடிகிறது.
அந்த வகையில் பாஜக அணியின் எதிர்ப்பு வாக்குகள் சிதறுவதை மஜக விரும்பவில்லை.
எனவே, நாட்டின் நலன் கருதி, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் மஜக போட்டியிடுவதில்லை என்று முடிவு செய்திருக்கிறது.
அதே சமயம் நாட்டின் எதிர்காலம் மற்றும் பண்மை கலாச்சாரத்தை பாதுகாக்கும் வகையில், பாஜக இடம் பெறும் அணியை தோற்கடித்து , காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட மதச்சார்பற்ற – சமூக நீதி கட்சிகள் இடம் பெறும் அணியை வெற்றி பெறச் செய்யும் வகையில் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறது.
இதர பிரச்சார-அணுகுமுறைகள் மற்றும் வியூகங்கள் குறித்து , தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு,, எதிர்வரும் தலைமை செயற்குழுவில் முடிவெடுக்கப்படும் என்றும் தலைமை நிர்வாகக் குழு தீர்மானிக்கிறது.
மேற்கண்ட தீர்மானம் பலத்த ஆராவாரத்திற்கிடையே வாசிக்கப்பட்டது.
புல்வமா தாக்குதலில் உயிரிழந்த 44 ராணுவ வீரர்களுக்காக 1 நிமிடம் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இப் பொதுக்கூட்டத்தில் பொருளாளர் ஹாரூண் ரஷீத், இணைப்பொதுச் செயலர் மைதீன் உலவி, துணைப் பொதுச் செயலாளர்கள் மன்னை.செல்லச்சாமி, ராவுத்தர்ஷா, மாநிலச் செயலாளர்கள் தைமியா, சீனி முகம்மது, மாநிலத் துணைச் செயலர்கள் புதுமடம். அனீஸ், ஷமீம் அஹ்மது, இளைஞர் அணி செயலர் அசார் உள்ளிட்டோர் உரையாற்றினர்.
மேலும் தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலா.நாசர், துணைப் பொதுச் செயலாளர்கள் கோவை. சுல்தான், மண்டலம் ஜெய்னுல் ஆபிதீன், மாநிலச் செயலாளர் நாச்சிக்குளம் தாஜுதீன், மாநில துணைச் செயலாளர்கள் பல்லாவரம். ஷபி, பொறியாளர் சைபுல்லா, புதுச்சேரி அப்துல் சமது, மாணவர் இந்தியா தலைவர் ஜாவீத், MJTS தலைவர் சலீம், மீனவர் அணி செயலர் பார்த்தீபன், விவசாய அணி செயலர் நாகை முபாரக், தகவல் தொழில்நுட்ப அணி செயலர் ஹாரீஸ், சுற்றுச்சூழல் அணி செயலர் அப்சர், உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
மத்திய சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பிஸ்மில்லாகான் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
பாரிமுனை எங்கும் மஜக கொடிகள் பறந்தது.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_மத்திய_சென்னை_கிழக்கு_மாவட்டம்.
28.02.2019.