டிசம்பர்.06, தஞ்சை இராணுவ விமானப் படைதளம் முற்றுகை..! மஜக டெல்டா மண்டல ஆலோசனைக் கூட்டம்…!

ுடந்தை.நவ.12.,
மனிதநேய ஜனநாயக கட்சியின் டெல்டா மண்டல ஆலோசனைக் கூட்டம் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் மதுக்கூர் K.இராவுத்தர்ஷா தலைமையில் நடைப்பெற்றது.

இக்கூட்டத்தில், தஞ்சையில் டிசம்பர் 06 அன்று மஜக வின் மாநில பொருளாளர் எஸ்.எஸ். ஹாரூன் ரசீது தலைமையில் நடைப்பெற உள்ள இராணுவ விமானப் படைதள முற்றுகை போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது குறித்து மாநில செயலாளர்கள் நாச்சிகுளம் தாஜுதீன், திருபுவனம்.H.ராசுதீன், விவசாய அணி மாநில செயலாளர் நாகை.N.S.முபாரக், தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில பொருளாளர் A.H.M ஹமீது ஜெகபர், கொள்கை விளக்க அணி மாநில துணைச் செயலாளர் A.காதர்பாட்ஷா ஆலோசனை வழங்கி உரையாற்றினர்.

மாவட்ட செயலாளர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துக்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு போராட்டகளத்திற்கு பெருமளவில் மக்களை திரட்டுவது என்ற உத்வேகத்துடன் இக்கூட்டம் நிறைவு செய்யப்பட்டது.

இக்கூட்டத்தில் தஞ்சை (மாநகர்/வடக்கு/தெற்கு),திருவாரூர், நாகை (வடக்கு/தெற்கு) மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டர்கள்.

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#டெல்டா_மண்டலம்.
11.11.18