ஜூலை 21, இன்று தியாக திருநாளான #பக்ரீத் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகைக்கு பிறகு, நாகை மாவட்டம் தோப்புத்துறையில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கடந்த இரண்டு ரமலான் பண்டிகைகளையும், ஒரு பக்ரீத் பண்டிகையையும் கொரணா காரணமாக கொண்டாட முடியவில்லை என்றும், இவ்வாண்டு தொற்று குறைந்துள்ளதால் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியோடு மக்கள் தொழுகை நடத்தி பிரார்த்தனை செய்ததாகவும் கூறினார். பக்ரீத் வாழ்த்து அறிக்கைகள் விடுத்த தலைவர்கள், சமூக வலைதளங்கள் வழியாக வாழ்த்து கூறிய நல் உள்ளங்கள் அனைவருக்கும் #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார். கொரணா தொற்று ஒழிந்து உலகம் மீண்டு வரவும், மக்கள் மகிழ்ச்சியான இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும் என்பதும் முக்கிய பிரார்த்தனையாக இருந்தது என்றும் கூறினார். மேலும், இத்திரு நாளையொட்டி தமிழக அரசுக்கு ஒரு வேண்டுகோளையும் முன் வைத்தார். எதிர்வரும் அண்ணா பிறந்த நாளையொட்டி, 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் தண்டணை கைதிகளை சாதி, மத, வழக்கு பேதமின்றி மனிதாபிமான அடிப்படையில் தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும் என்றும், அதில் பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் மற்றும் 60
வாழ்த்து அறிக்கை
கொரோனா ஒழிந்து உலகம் இயல்பு நிலைக்கு திரும்ப பிரார்த்திப்போம்!!
மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ரமலான் நோன்பு பெருநாள் வாழ்த்து செய்தி!! உலகின் மற்றுமொரு திருநாளாக 'ஈதுல் பித்ர்' எனும் நோன்புப் பெருநாள் மலர்ந்திருக்கிறது. உலகப் பொதுமறையான திருக்குர்ஆன் அருளப்பட்ட புனித ரமலான் மாதத்தில் இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டாக 30 நாட்கள் நோன்பு இருந்து அதன் நிறைவாக உலகமெங்கும் வாழும் 200 கோடிக்கும் அதிகமான மக்கள் இப் பெருநாளை கொண்டாடி மகிழ்கிறார்கள். பசியின் கொடுமையை உணரும் வகையிலும்;பிறர் பசியை போக்கிட வேண்டும் என்ற எண்ணத்தை பெறும் வகையிலும் ஒரு சொட்டு தண்ணீர் கூட அருந்தாமல் இறை வழிபாட்டோடு நகரும் இந்த நாட்கள் உணர்வுபூர்வமானவை! நிறைவாக பெருநாளை கொண்டாடி மகிழ வான்பிறையை எதிர்நோக்கும் நிமிடங்கள் அழகானவை! ஆனால் அந்த உற்சாகத்தை வழக்கம் போல கொண்டாட முடியாத சூழலில் நாம் இருக்கி றோம். கொரணா பெருந்தொற்றின் காரணமாக குடும்பத்தினரோடும், பல் சமூக நண்பர்களோடும் இப்பெருநாளை கொண்டாடி மகிழும் நிலையில் தற்போதைய சூழல் இல்லை என்பது வருத்தத்துக்குரிய உண்மையாகும். சென்ற ஆண்டைப் போலவே இவ்வாண்டும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகம் பரவுகின்ற நிலையில்; அவரவர் இல்லங்களிலேயே தொழுது விட்டு மகிழ்ச்சியினை கட்டுப்பாட்டோடு வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம்
திமுக தலைமையிலான புதிய ஆட்சி சாதனைகள் படைக்க மனமார வாழ்த்துகிறோம்!
மஜக பொதுச்செயலாளர் மு. தமிமுன் அன்சாரி அறிக்கை! தமிழ்நாட்டின் 16-வது சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு மாபெரும் வெற்றியை தமிழக மக்கள் பரிசளித்து இருக்கிறார்கள். 234 இடங்களில் 163 இடங்களை இக்கூட்டணிக்கு வழங்கி தெளிவான வெற்றியை மக்கள் வழங்கியிருக்கிறார்கள். இதன் மூலம் வடக்கத்திய அரசியல் படையெடுப்பை தடுத்து நிறுத்தி, பாஜகவோடு யார் கூட்டணி வைத்தாலும் ஆட்சி அதிகாரத்தின் நிழலைக் கூட நெருங்க முடியாது என்ற செய்தியை தமிழகம் உணர்த்தியிருக்கிறது. மாபெரும் இந்த வெற்றிக்காக கடந்த ஓராண்டுக்கும் மேலாக கடுமையான களப்பணிகளின் மூலம் அயராது உழைத்த திமுக தலைவர் அண்ணன் தளபதி அவர்களின் உழைப்பு அளவிட முடியாதது. தன் இளமைக் காலம் முதல், தமிழக மக்களுக்காக பல வகையிலும் உழைத்த அவருக்கு, மக்கள் தற்போது முதல்வர் பதவியை அளித்து கௌரவித்து இருக்கிறார்கள். திராவிட இயக்கத்தை தொடர்ந்து வெற்றிப் பாதையில் வழிநடத்தி செல்லும் தலைவராக அவர் உயர்ந்திருக்கிறார். அதுபோல் மேற்கு வங்கத்தில் அடக்குமுறைகளையும், அத்துமீறல்களையும் எதிர்கொண்டு திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி ஈட்டிய பெரும் வெற்றி வரலாற்று சிறப்புமிக்கதாகும். கேரளாவில் முதல்வர் பினராய் விஜயன் தலைமையில்
மஜக திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் இல்ல திருமண நிகழ்வு..!! மஜக மாநில பொருளாளர் எஸ் எஸ் ஹாரூன் ரசீது வாழ்த்து..!!
திருப்பத்தூர்., பிப்.19., மனிதநேய ஜனநாயக கட்சியின் திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் M.ஜஹிருஸ் ஜமா, அவர்களின் சகோதரர் மணமகன் M. ஜஹிர் அப்பாஸ், அவர்களின் திருமண நிகழ்வு ஆம்பூர் டிரேட் சென்ரில் சிறப்பாக நடைபெற்றது. இத்திருமண நிகழ்வில் மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் கலந்து மணமக்களை வாழ்த்தினார்கள். மேலும் இந்நிகழ்வில் மாநில துணைப் பொதுச்செயலாளர் என்.ஏ.தைமிய்யா , மாநில துணைச் செயலாளர்கள் புதுமடம் அனிஸ், அப்சர் சையது , தலைமை செயற்குழு உறுப்பினர் மன்னிவாக்கம் யூசுப் , திருப்பத்தூர் மாவட்ட துணைச் செயலாளர்கள் ஷாநவாஸ் , முன்னா என்கிற நசீர், மாவட்ட இளைஞரணி மாவட்ட செயலாளர் அக்மல், MJTS மாவட்ட செயலாளர் அப்ரோஸ் , திமுக அம்பூர் சட்டமன்ற உறுப்பினர் A. C. வில்வநாதன் , திமுக ஆம்பூர் நகர செயலாளர் ஆறுமுகம் , இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அப்துல் பாசித் , அமுமுக ஆம்பூர் நிர்வாகி ஜபில் அஹ்மது. Ex.Mc, கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகி ஷப்பிர் அஹ்மத் பாஷா , தமுமுக மாவட்ட துணைச் செயலாளர் இம்ரான் ,
மஜக சேலம் மாவட்ட செயலாளர் இல்ல திருமண நிகழ்வு..!! மஜக மாநில பொருளாளர் எஸ் எஸ் ஹாரூன் ரசீது வாழ்த்து..!!
சேலம்., பிப்.7 மனிதநேய ஜனநாயக கட்சியின் சேலம் மாவட்ட செயலாளர் மஹாபூப் அலி அவர்களின் இல்ல திருமண விழா சேலத்தில் காந்தி ஸ்டேடியம் அருகில் உள்ள தமிழ் சங்கம் திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. மணமகன் H.D.முஹம்மது ஹனிபா மற்றும் மணமகள் A.ஜெசிமா பர்ஜானா ஆகியோருக்கு நடைபெற்ற இத்திருமண நிகழ்வில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது மற்றும் இணைப் பொதுச்செயலாளர் ஜே.எஸ்.ரிபாயி , துணைப் பொதுச்செயலாளர் மன்னை.செல்லச்சாமி ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். இந்நிகழ்வில் மாநில துணைச் செயலாளர் பாபு ஷாஹின்ஷா, மாவட்ட பொருளாளர் O.S.பாபு, மாவட்ட துணைச் செயலாளர்கள் சர்புதீன், முகமது சுஹகெய்ல், முகம்மது சபீர், கொள்கை விளக்க அணிச் செயலாளர் முகம்மது சபீர் மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் அசன், மாவட்ட மருத்துவ சேவை அணி பொருளாளர் விக்னேஷ், மாவட்ட இளைஞரணி செயலாளர் காஜா, அஸ்தம்பட்டி பகுதி செயலாளர் அப்பாஸ், பகுதி பொருளாளர் சலீம், கொண்டலாம்பட்டி பகுதி செயலாளர் யாசின், பகுதி பொருளாளர் கார்த்தி, சுற்றுச்சூழல் அணி செயலாளர் பிலால் வர்த்தகர் அணி செயலாளர் ஹக்கீம், அம்மாபேட்டை பகுதி நிர்வாகிகள்