திண்டுக்கல்.ஜூலை:10.,நேற்று திண்டுக்கல் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகளுக்கான நிர்வாக கூட்டம் மாவட்ட செயலாளர் A.ஹபிபுல்லா தலைமையில் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டம் மாவட்ட பொருளாளர் U.மரைக்காயர் சேட், மாவட்ட துணைச் செயலாளர்கள் A. அபி, A. அப்துல் காதர் ஜெய்லானி, R.உமர் அலி இவர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றன. இதில் தொழிற்சங்க மாவட்ட செயலாளர் R.M. குத்புதீன், மாவட்ட மருத்துவ அணி செயலாளர் B. காதர் ஒலி, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் M.அனஸ் முஸ்தபா , இளைஞரனி மாவட்ட செயலாளர் Z.சாகித் கான், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் பிர்தெளஸ், துணைச் செயலாளர்கள் சாகுல், முனாப்தீன் மற்றும் நகர, ஒன்றிய நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்கள் :- 1) பொதுக்கூட்டத்திற்கு வருகை தரும் பொதுச்செயலாளர், மாநில பொருளாளர், இணை பொதுச்செயலாளர் மற்றும் மாநில நிர்வாகிகள் அனைவருக்கும் சிறப்பான வரவேற்பு அளிப்பது. 2) திண்டுக்கல் மீரான் மைதீன் ( சிறைவாசி) அவர்கள் இல்லத்திற்க்கு மாநில நிர்வாகிகள் அனைவரும் சென்று மருத்துவம் அளிப்பது சம்மந்தமாக ஆலோசனை செய்வது . 3) மாநகர நிர்வாகம் கலைக்கப்பட்டு.திண்டுக்கல் மாநகரில் அதிகமான கிளைகள் உருவாக்குவதற்காக பொறுப்புக் குழு அமைக்கப்பட்டன. அக்குழுவின்
மஜக தகவல் தொழில்நுட்ப அணி – MJK IT-WING
மஜக தகவல் தொழில்நுட்ப அணி – MJK IT-WING
மயிலாடுதுறை ஆதனூர் இடையே தடுப்பு அணை கட்ட வலியுறுத்தி கோரிக்கை பேரணி! மஜக பங்கேற்பு..!
நாகை.ஜூலை.9., சீர்காழி கொள்ளிடம் ஆற்றில் மயிலாடுதுறை வட்டம் குமாரமங்கலம்-காட்டு மன்னார்குடி வட்டம் ஆதனூர் இடையே தடுப்பு அணை கட்டும் திட்டத்தினை உடனே துவங்க வேண்டும், சீர்காழி உப்பனார் வடிகால் வாய்காலில் கடல்நீர் புகுந்து 20 கி.மீ தூரம் விவசாய நிலங்கள் உப்பு நிலங்களாக மாறி விட்டதை தடுத்திட உப்பானற்றில் இடையே தடுப்பு அணை கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பாக அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைத்து பிரச்சார பேரணி கடலங்குடியில் காலை 10 மணிக்கு துவங்கியது. இதில் க.ராஜ் மோகன் தலைமை தாங்கினாரகள். பிரசாரத்தை மா.ஈழவளவன் துவக்கி வைத்தார். பிரச்சார பேரணி மாலை 2:30 மணியளவில் சீர்காழி வந்தடைந்த போது பழைய பேருந்து நிலையம் அருகாமையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் N.M.மாலிக் கலந்துக்கொண்டு கோரிகக்கைகள் விளக்க உரை நிகழ்த்தினார்கள். மற்றும் மாவட்ட பொருளாளர் ஆக்கூர் ஷாஜஹான், கொள்ளிட ஒன்றிய செயலாளர் அன்வர்தீன், ஒன்றிய துணை செயலாளர் ஹலீல் ரஹ்மான் உட்பட மனிதநேய சொந்தங்கள் பலர் கலந்துக்கொண்டனர். தகவல்: தகவல் தொழில் நுட்ப அணி, #MJK_IT_WING மனிதநேய ஜனநாயக கட்சி. நாகை வடக்கு மாவட்டம். 09.07.2017
மஜக வேடசந்தூர் ஒன்றிய செயலாளரை நேரில் சென்று நலம் விசாரித்த திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள்…
திண்டுக்கல்.ஜூலை.09., நேற்று திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஒன்றிய செயலாளர் V.செல்வராஜ் அவர்களுக்கு விபத்து ஏற்பட்டதால் மஜக மாவட்ட நிர்வாகிகள் மூலம் அரசு தலமை மருத்துவமணை அனுமதிக்கபட்டு விடு திரும்பிய ஒன்றிய செயலாளரை, மாவட்ட செயலாளர் A.ஹபிபுல்லா, மாவட்ட துணைச் செயலாளர் A.அப்துல் காதர் ஜெய்லானி, மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் A.மரிய மனோஜ் ஆகியோர் நேரில் சென்று நலம் விசாரித்தனர். பின்பு வேடசந்தூர் ஒன்றிய செயலாளர் அவர்கள் கூறுகையில் மனிதநேய ஜனநாயக கட்சி திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகளுக்கு நான் நன்றி சொல்ல கடமை பட்டுள்ளதாகவும், என்னால் முடிந்தவரை மக்கள் பணியில் ஈடுபடுவேன் என கூறினார். அதற்கு பதிலலித்த மாவட்ட செயலாளர் A.ஹபிபுல்லா அவர்கள் மனிதநேய ஜனநாயக கட்சி அனைத்து சமுக மக்களுக்கும் சொந்தமான கட்சி ஆகவே உங்கள் உடல்நலம் நன்றாக தேரிய பின்பு நீங்கள் உங்கள் எண்ணம் போல் மக்கள் பணியில் தாராளமா ஈடுபடலாம் என்றார். தகவல் : தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி, திண்டுக்கல் மாவட்டம். #MJK_IT_WING 09/07/2017
ஞானையா மரணம்! வரலாற்று ஆய்வாலரை இழந்திருக்கிறோம்..! மஜக இரங்கல்…!
(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி வெளியிடும் அறிக்கை) முதுபெரும் இடது சாரி இயக்க ஊழியரும், வரலாற்று ஆய்வாளரும், பன்னூல் ஆசிரியருமான டி.ஞானையா அவர்கள் மரணமடைந்தார் என்ற செய்தி ஆழமான வருத்தங்களை அளிக்கிறது. இளம் வயது முதல் தன்னை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இனைத்துக்கொண்டு அதில் செயல்வீரராகவும், சிந்தனையாளராகவும் இயங்கினார். ஜனசக்தியில் அவர் எழுதிய கட்டுரைகள் அனைவருக்கும் அரசியல் பாடங்களாக இருந்தன. அவர் எழுதிய நூல்கள் யாவும் வரலாற்று மாணவர்களுக்கான பயிற்சி வகுப்புகளாக இருந்தன. இந்திய முஸ்லிம் சமுதாயம் குறித்து அவர் எழுதிய கட்டுரைகள் யாவும், முஸ்லிம் சமுதாய தலைவர்கள் அனைவரும் ஆய்வு செய்யகூடிய அரிய தொகுப்புகளாக இருக்கின்றன. அவரது மரணம் இடதுசாரி இயக்கத்திற்கும் நூலக உலகிற்கும் ஒரு பெரும் இழப்பு என்பதில் ஐயமில்லை. அவரை இழந்து குடும்பத்தினர்கள், மற்றும் தோழர்கள் அவரது வாசகர்கள் உள்ளிட்ட அனைவரின் துயரத்திலும் மனித நேய ஜனநாயக கட்சியும் ஆழ்ந்த வருத்தத்துடன் பங்கேற்கிறது. இவன் M.தமிமுன் அன்சாரி, பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 09/07/2017
மரக்கன்று நடும் விழா மஜக பொதுச் செயலாளர், மாநில பொருளாளர் பங்கேற்பு…!
கடலூர்.ஜூலை.09., இன்று மனிதநேய ஜனநாயக கட்சி கடலூர் தெற்கு மாவட்டம் லால்பேட்டை நகரம் சார்பாக மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. இதில் மஜக பொதுச் செயலாளரும் நாகை சட்டமன்ற உறுப்பினருமான M.தமிமுன்அன்சாரி MA.MLA மற்றும் மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரசீத் M.com ஆகியோர் மரக்கன்றுகளை நட்டனர். உடன் மஜக மாநில செயற்குழு உறுப்பினர் A.செய்யது அபுதாஹிர் மற்றும் கடலூர் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் லால்பேட்டை நகரநிர்வாகிகள் களந்து கொண்டனர். தகவல் ; மஜக தகவல் தொழிநுட்ப அணி, #MJK_IT_WING கடலூர் தெற்கு மாவட்டம். 09.07.2017