நாகை.ஜூலை.9., சீர்காழி கொள்ளிடம் ஆற்றில் மயிலாடுதுறை வட்டம் குமாரமங்கலம்-காட்டு மன்னார்குடி வட்டம் ஆதனூர் இடையே தடுப்பு அணை கட்டும் திட்டத்தினை உடனே துவங்க வேண்டும், சீர்காழி உப்பனார் வடிகால் வாய்காலில் கடல்நீர் புகுந்து 20 கி.மீ தூரம் விவசாய நிலங்கள் உப்பு நிலங்களாக மாறி விட்டதை தடுத்திட உப்பானற்றில் இடையே தடுப்பு அணை கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பாக அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைத்து பிரச்சார பேரணி கடலங்குடியில் காலை 10 மணிக்கு துவங்கியது.
இதில் க.ராஜ் மோகன் தலைமை தாங்கினாரகள். பிரசாரத்தை மா.ஈழவளவன் துவக்கி வைத்தார்.
பிரச்சார பேரணி மாலை 2:30 மணியளவில் சீர்காழி வந்தடைந்த போது பழைய பேருந்து நிலையம் அருகாமையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் N.M.மாலிக் கலந்துக்கொண்டு கோரிகக்கைகள் விளக்க உரை நிகழ்த்தினார்கள்.
மற்றும் மாவட்ட பொருளாளர் ஆக்கூர் ஷாஜஹான், கொள்ளிட ஒன்றிய செயலாளர் அன்வர்தீன், ஒன்றிய துணை செயலாளர் ஹலீல் ரஹ்மான் உட்பட மனிதநேய சொந்தங்கள் பலர் கலந்துக்கொண்டனர்.
தகவல்:
தகவல் தொழில் நுட்ப அணி,
#MJK_IT_WING
மனிதநேய ஜனநாயக கட்சி.
நாகை வடக்கு மாவட்டம்.
09.07.2017