யாரும் வரம்பு மீறக்கூடாது! மஜக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி அறிவுரை!

கோவை.ஜுலை.30., கோவையில் நடைபெற்ற #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) மாவட்ட தலைமை அலுவலக திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற #மஜக பொதுச் செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் கட்சியினருக்கு அறிவுரை வழங்கும் விதமாக பல அரிய கருத்துகளை கூறி பொதுமக்களின் உள்ளங்களை தொட்டிருக்கிறார்.

அவர் பேசியதாவது …

இன்று (29.07.18) காலை அமைச்சர் இங்கு வரும் போது செண்டு மேளம் அடித்து வரவேற்றது தேவையற்றது. இனி இது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். தேர்தல் நேரங்களில் மட்டும் தான் இது போன்ற விஷயங்கள் கூட்டணி கலாச்சாரம் என்ற அடிப்படையில் அனுமதிக்கப்படுகிறது. இதை உணர்ந்து இனி மஜக சொந்தங்கள் செயல்பட வேண்டும்.

என்னை இளம் காயிதே மில்லத் என அன்பு மிகுதியால் சிலர் சொன்னார்கள். அவரின் புகழ் நிழலில் கூட எங்களால் நெருங்க முடியாது. இது தான் உண்மை.

காயிதே மில்லத் தூக்கி ஓடிய ஜோதியை, அப்துல் சமது சாகிபும், பிறகு அப்துல் லத்தீப் சாகிபும் தூக்கி ஓடினார்கள். இப்போது நாங்கள் தூக்கி ஒடுகிறோம்.

அவர்களது பாடங்களையும் ., செயல்களையும் தான் நாம் பின்பற்றுகிறோம்.

எனவே எங்களுக்கு புனித பிம்பங்களை போர்த்தாதீர்கள். நாங்கள் சாமானியர்கள். பலம்., பலகீனம், கோபம், சாபம், குறைகள், நிறைகள் கொண்ட சராசரிகள் தான்.

நாங்கள் முஸ்லிம் சமுதாயத்திற்கு தலைவர்கள் இல்லை. நாங்கள் அவர்களுக்கு தொண்டர்கள் தான். அழுக்கு சட்டை போட்டவர்களுடன் தான் பயணிக்க விரும்புகிறோம்.

எனவே எங்களை மிகைப்படுத்தி பார்க்க வேண்டாம்.

நாங்கள் ஆட்டு மந்தைகள் இல்லை. தலைவர்கள் தனித்தனியாக சிந்திக்கிறோம். ஆனால் முடிவை ஒன்றாக எடுக்கிறோம். அதுதான் எங்களின் சிறப்பு. தலைவர்களும், தொண்டர்களும் இங்கே ஒரே மாதிரியாக சிந்திக்கிறோம். அது எங்களின் பலம்.

மஜக முஸ்லிம் சமூகத்தை தாண்டி , அனைவராலும் வரவேற்கப்படுவதாகவும், பாராட்டப் படுவதாகவும் இங்கு பேசிய சட்டமன்ற உறுப்பினர்களும், சிறப்பு விருந்தினர்களும் கூறினர். இது மஜகவின் அணுகுமுறைகளுக்கும், பன்முக பார்வைக்கும் கிடைத்த வெற்றியாகும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பிரான்ஸ் புறப்படும் காரணத்தால், முன்னதாக அமைச்சர் SP.வேலுமணி அலுவலகத்திற்கு வருகை தந்து சிறப்பித்தார்.

அன்று மாலை மஜக சார்பு தொழிற் சங்கமான #MJTS சார்பில் #புதிய_பாதை என்ற பெயரில் 50 ஆட்டோக்களை உள்ளடக்கி ஆட்டோ நிறுத்தத்தை பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி தொடங்கி வைத்தார். அந்த ஆட்டோக்களில் தலைமை நிர்வாகிகள் அமர்ந்து புதிய அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக பயணித்தனர். வழியெங்கும் பொதுமக்கள் உற்சாகமாக கையசைத்து வரவேற்று ஆராவாரம் செய்தனர்.

கட்சி கொடிகளை பொருளாளர் ஹாரூண் ரஷீது, அவர்களும், தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலா.நாசர் ஆகியோர் ஏற்றி வைத்தனர்.

சிறப்பு விருந்தினர்களாக சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன்.அர்ச்சுனன், PRG.அருண்குமார், எட்டிமடை சண்முகம், முன்னாள் அமைச்சர் தாமோதரன், தமிழக ஹஜ் கமிட்டி தலைவர் CTC.அப்துல்ஜப்பார், தொழில் அதிபர் அனூப்ஆண்டனி, மற்றும் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருண்ரஷீது, தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலாநாசர், அவை தலைவர் நாசர்உமரி, துணை பொதுச் செயலாளர்கள் சுல்தான்அமீர், சையது அஹமதுபாரூக், மன்னை செல்லச்சாமி, ராவுத்தர்ஷா.

மாநில செயலாளர்கள் தைமியா, சீனி முஹம்மது, துணை செயலாளர்கள் அப்துல்பஷீர், புதுமடம் அனீஸ்,ஈரோடு பாபு ஷாஹின்சா, தலைமை நிர்வாகக்குழு உறுப்பினர் AS.அலாவுதீன், மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ் மற்றும் மாவட்ட, பகுதி, நகரம், ஒன்றியம், கிளை, நிர்வாகிகள் திரளாணோர் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_கோவை_மாநகர்_மாவட்டம்
30.07.18