மரக்கன்று நடும் விழா மஜக பொதுச் செயலாளர், மாநில பொருளாளர் பங்கேற்பு…!

image

கடலூர்.ஜூலை.09., இன்று மனிதநேய ஜனநாயக கட்சி கடலூர் தெற்கு மாவட்டம் லால்பேட்டை நகரம் சார்பாக மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

இதில் மஜக பொதுச் செயலாளரும் நாகை சட்டமன்ற உறுப்பினருமான M.தமிமுன்அன்சாரி MA.MLA மற்றும் மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரசீத் M.com ஆகியோர் மரக்கன்றுகளை நட்டனர்.

உடன் மஜக மாநில செயற்குழு உறுப்பினர் A.செய்யது அபுதாஹிர் மற்றும் கடலூர் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் லால்பேட்டை நகரநிர்வாகிகள் களந்து கொண்டனர்.

தகவல் ;
மஜக தகவல் தொழிநுட்ப அணி,
#MJK_IT_WING
கடலூர் தெற்கு மாவட்டம்.
09.07.2017