சிறைவாசிகள் விடுதலைக்கு சாதகமான முதல்வர் பதிலுக்கு தமிமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸ் ஆகியோர் நன்றி தெரிவித்தனர்..!

image

சென்னை.ஜூலை.08., இன்று காவல் துறை மானியக் கோரிக்கையின் போது மாண்புமிகு எதிர்க்கட்சி திமுக உறுப்பினர் ஜெ.அன்பழகன் அவர்கள் 10 ஆண்டுகள் நிறைவு செய்த ஆயுள் தண்டனைக் கைதிகளை MGR நூற்றாண்டு விழாவையொட்டி முன் விடுதலை செய்ய வேண்டும் என்றும் கோரினார்கள்.

எப்போதுமே ஆளுங்கட்சியோடு மோதும் ஜெ. அன்பழகன் இன்று இக்கோரிக்கையை சிக்கல் இல்லாத வார்த்தைகளோடு முன்வைத்து போது அனைவரும் ஆச்சர்யத்ததோடு பார்த்தார்கள்.

இதற்கு பதில் அளித்த மாண்புமிகு முதல்வர் எடப்பாடி அவர்கள் பேரறிவாளன் பரோல் குறித்து பரிசிலினையில் இருப்பதாகவும்,10 ஆண்டுகள் நிறைவு செய்த சிறைவாசிகளை விடுதலை செய்வது குறித்து அரசு தலைமை வழக்கறிஞரிடம்
(AGM) மற்றும் அதிகாரிகளிடம் கருத்து கேட்டிருப்பதாகவும், இது குறித்து பரிசிலிப்பதாகவும் கூறினார். அப்போது உறுப்பினர்கள் அனைவரும் கட்சி பேதமின்றி மேஜையை தட்டி ஆதரவளித்தனர்.

இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர்
M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் அவையில் பேசிய முக்கிய பகுதிகள் பின்வருமாறு…

மாண்புமிகு பேரவை துணை  தலைவர் அவர்களே… இன்றைய தினம் சட்டப்பேரவையில் சிறைவாசிகளின் விடுதலை குறித்து மாண்புமிகு முதல்வர் அவர்கள் அளித்த பதில் மகிழ்ச்சியளிக்கிறது.

நானும் அண்ணன் தனியரசு, அண்ணன் கருணாஸ் அவர்களும் இக்கோரிக்கையை 15 நாட்களுக்கு முன்பாக முதல்வரை சந்தித்து நேரில் கொடுத்தோம்
நான் சட்ட பேரவையில் பேசினேன்.

மாண்புமிகு அமைச்சர்
C.V.சண்முகம் அவர்கள் இது குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும், பரிசிலிப்பதாகவும் கூறினார்கள்.

நேற்று மாண்புமிகு எதிர் கட்சி தலைவர் அவர்களும், எதிர் கட்சி துணை தலைவர் அவர்களும் சட்டபேரவையின் துணை சபாநாயகர் அவர்களும், இன்று எதிர் கட்சி உறுப்பினர் ஜெ.அன்பழகன் அவர்களும் முன் வைத்திருக்கின்றார்கள். அதற்கு நன்றி தெரிவிக்கின்றோம்.

இதற்கு சாதகமாக பதிலளித்த மாண்புமிகு முதல்வர்  அவர்களுக்கும் அமைச்சர், பெருமக்களுக்கும், நெஞ்சார்ந்த  நன்றியை தெரிவிக்கின்றேன் என்று M.தமிமுன் அன்சாரி MLA பேசினார்.

அதன் பிறகு முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் கருணாஸ் MLA, கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர்
தனியரசு MLA ஆகியோரும் நன்றி தெரிவித்து பேசினார்கள்.

சட்டப்பேரவை முடிந்த
பிறகு  மூன்று MLA_க்களும்
(தமிமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸ்) நேரடியாக
முதல்வரையும், மூத்த அமைச்சர்களையும் சந்தித்து நன்றி கூறினார்கள். அதுபோல்
அதிமுக , திமுக , காங்கிரஸ், முஸ்லீம் லீக் உறுப்பினர்களுக்கும் நன்றி கூறிய பின்பு பத்திரிக்கையாளர்களையும் சந்தித்தனர்.

தகவல்; சட்டமன்ற வளாக செய்தியாளர்கள் குழு
சென்னை.
08.07.2017