You are here

சட்டசபை வளாகத்தில் கோக், பெப்சிக்கு எதிராக விழிப்புணர்வு பதாகை! M.தமிமுன் அன்சாரி MLA முன்முயற்சி!

image

பிப்.02., நேற்று தமிழக சட்டசபைக்கு வந்த மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள், அவைக்கு நுழைவதற்கு முன்பு “2017, பிப்ரவரி 1 முதல் கோக், பெப்சி  குடிப்பதை நிறுத்திவிட்டேன். வணிகச் சங்கங்களின் கோரிக்கை வெல்லட்டும்” என்ற பதாகையோடு வந்தார்.

அப்போது பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, ஜல்லிக்கட்டுக்காக மாணவர்கள் – இளைஞர்கள் போராட்டம் நடத்தியப்போது பெப்சி, கோக் பானங்களுக்கு எதிராகவும் முழக்கமிட்டார்கள்.

அதன் விளைவாக மார்ச் 1 முதல் வணிகர் சங்கங்கள் இனி பெப்சி, கோக் விற்கக்கூடாது என வணிகர்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.

அதை ஆதரிக்கும் விதமாக, இன்று எனது நிலைபாட்டை தெரிவித்தேன் என்று கூறினார்.

தகவல்;
மஜக தகவல் தொழில்நுட்ப அணி (MJK IT Wing)

Top