You are here

கூம்பு வடிவ ஒலிபெருக்கி விவகாரம்… தமிமுன் அன்சாரியின் கோரிக்கை பரீசீலிக்கப்படும் முதல்வர் பதில்!

சென்னை.ஜூலை.08., கோயில், பள்ளிவாசல், தேவாலயங்களில் கூம்பு வடிவ ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்துவதை குறித்து கவன ஈர்ப்பு தீர்மானத்தை மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர்
M.தமிமுன் அன்சாரி MLA சபாநாயகரிடம் கொடுத்திருந்தார்.

இதுகுறித்து முதல்வர் மற்றும்  அமைச்சர்களிடமும் பல விளக்கங்களை எடுத்துக் கூறினார்.

அதாவது கூம்பு வடிவ ஒலிப் பெருக்கிகளை 70 டெசிபல் அளவுக்கு பயன்படுத்துவது அல்லது 6 மாத கால அவகாசம் கொடுத்து ஸ்பீக்கர்  பாக்ஸ் மாற்றிக் கொள்ள அனுமதிப்பது ஆகிய இரண்டில் ஒன்றையாவது பரீசீலிக்க வேண்டும் என்று வாதிட்டு வருகிறார்.

இந்நிலையில் இன்று (08.07.17) சட்டபேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கையில் பேசிய முதல்வர் திரு.எடப்பாடியார் அவர்கள் கூம்பு வடிவ ஒலிப்பெருக்கி தொடர்பாக மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் M. தமிமுன் அன்சாரியின் கோரிக்கை பரீசீலிக்கப்படும் என பதிலளித்தார்.

தகவல்:
மஜக தகவல் தொழில் நுட்பஅணி.
சட்டமன்ற செய்தியாளர் குழு.
சென்னை.
08.07.2017

Top