You are here

புதிய தலைமுறை விருது வழங்கும் நிகழ்ச்சி…!

image

image

சென்னை.ஜூலை.08., புதிய தலைமுறை தொலைக்காட்சியின் ஆறாம் ஆண்டு விழாவையொட்டி கலை, இலக்கியம், சினிமா, தொழில், சமூக சேவை, சுற்றுச் சூழல் உள்ளிட்ட துறைகளில் சாதனைப் படைத்த தமிழர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நந்தனம் டிரேட் சென்டரில் நேற்று நடைபெற்றது.

இதில் அமைச்சர் செல்லூர் ராஜு, மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA, பேரா. ஜவாஹிருல்லாஹ், தனியரசு MLA, வேல்முருகன், ஆளுர் ஷாநவாஸ், நக்கீரன் கோபால், பேரா. ஹாஜாகனி, மகேஷ் பொய்யாமொழி MLA, கோ.வி.செழியன் MLA, செம்மலை MLA உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களுடன், இலக்கியவாதிகள், IAS, IPS அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

கவிஞர் வண்ணதாசன், பேரா. கல்யாணி, பூவுலகின் நண்பர்கள். சுந்தர்ராஜன் உள்ளிட்ட பலரும் விருதுகளை பெற்றனர்.

தகவல் ; மஜக தகவல் தொழில்நுட்ப அணி,
#MJK_IT_WING
சென்னை.
07.07.2017

Top