#நாகை_அரசு_மருத்துவமனைக்கு_9_புதிய_அறிவிப்புகள்!
நாகப்பட்டினம் அரசு பொது மருத்துவமனையை மேம்படுத்த M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பலமுறை நேரடி ஆய்வுகளை மேற்கொண்டு டாக்டர்கள், நர்ஸ்சுகள், நோயாளிகளிடமும் குறைகளை கேட்டறிந்து அவற்றை சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கவனத்திற்கும் கொண்டு சென்றார்.
மேலும், மருத்துவர்களின் பற்றாக்குறையை தீர்க்க சுகாதாரத்துறை அமைச்சர் திரு. விஜய் பாஸ்கர் அவர்களிடமும், துறை செயலாளர்
திரு. ராதாகிருஷ்ணன் IAS அவர்களிடமும் கோரிக்கைகளை தொடர்ந்து முன்னிறுத்தி வருகிறார்.
இந்நிலையில் சுகாதாரத்துறை மானியக் கோரிக்கையில் அமைச்சர் விஜய் பாஸ்கர் அவர்கள் 108 புதிய அறிவிப்புகளை வெளியிட்டு பலரின் பாராட்டுகளை பெற்றுள்ளார். இதில் 8 அறிவிப்புகளில் நாகப்பட்டினம் அரசு பொது மருத்துவமனைக்கு திட்டங்களை ஒதுக்கியிருக்கிறார்.
1. மருந்துக்கிடங்குகளை விரிவாக்க புதிய கட்டிடம்.
2. மத்திய தொற்றுநோய் கிருமி நீக்கம் மற்றும் வழங்கல் பிரிவு உருவாக்கம்.
3. புற்று நோய் பிரிவுகளுக்கு பல்ஸ் ஆக்ஸிமீட்டர், மல்டி பேரா மானிட்டர் போன்ற நவீன கருவிகள் வழங்கல்.
4. நுரையீரல் நோய்க்கென உயர்தர மருத்துவ சிகிச்சை வசதிகள்.
5. பிறவி இருதய நோய் குறைபாடு உள்ள குழந்தைகளின் நோயை கண்டறிய எக்கோ கார்டியோகிராம் கருவி வழங்கல்.
6. நாகை அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இதர பணியாளர்களுக்கு மனநலத் திட்டம் பற்றிய பயிற்சியளித்தல்.
7. காச நோயாளிகளுக்காக புதிய உள் நோயாளிகள் பிரிவு உருவாக்கம்.
8. தேசிய புகையிலை தடுப்பும் சட்டம் விரிவுபடுத்துதல்.
மேற்கண்ட 8 புதிய திட்டங்களை சட்ட சபையில் அறிவித்ததும், இதை வரவேற்று பேசிய நாகை சட்டமன்ற உறுப்பினர் M. தமிமுன் அன்சாரி அவர்கள் “இவை சத்தான திட்டங்கள் : முத்தான திட்டங்கள்: வித்தான திட்டங்கள்” என பாராட்டிவிட்டு, 108 வேகத்தில் இத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பதாக கூறினார்.
மேலும் அமைச்சரை ஊக்குவிக்கும், உங்கள் பெயர் விஜய் பாஸ்கர் இனி விஜய ‘பாக்ஸர்’ என மாற்றி கொள்ளலாம் என்றதும் அனைவரும் மேஜையை தட்டி ரசித்தனர்.
அதன் பிறகு சபை முடிந்ததும் நாகை மருத்துவமனைக்கு புதிய திட்டங்கள் அறிவித்ததற்க்கு அமைச்சர் விஜய் பாஸ்கருக்கும், துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கும் M. தமிமுன் அன்சாரி MLA அவர்கள் நன்றி கூறினார்.
இதனிடையே 110 விதியின் கீழ் தமிழக முதல்வர் எடப்பாடியார் அவர்கள் நாகை அரசு மருத்துவமனைக்கு MRI ஸ்கேன் வசதி செய்து தரப்படும் என அறிவித்திருக்கிறார்.
இதற்கும் முதல்வரை சந்தித்து
M. தமிமுன்அன்சாரி MLA நன்றி கூறினார்.
இதுவரை நாகப்பட்டினம் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு மொத்தமாக இவ்வளவு அறிவிப்புகள் வந்ததில்லை என நாகை நகர சமூக ஆர்வலர்களும், நாகை மாவட்டத்தை சேர்ந்த பொது நல தொண்டு இயக்கங்களை சேர்ந்தவர்களும்
M. தமிமுன்அன்சாரி MLA அவர்களை தொடர்புக் கொண்டு நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.
ஏற்கனவே டெல்டா மாவட்டங்களிலையே நாகை அரசு பொது மருத்துவமனையில்தான் டயாலிஸிஸ் பிரிவு சிறப்பாக இயங்கி வருவதும் குறிப்பிடதக்கது.
தகவல்;
நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்.