ஞானையா மரணம்! வரலாற்று ஆய்வாலரை இழந்திருக்கிறோம்..! மஜக இரங்கல்…!

image

(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி வெளியிடும் அறிக்கை)

முதுபெரும் இடது சாரி இயக்க ஊழியரும், வரலாற்று ஆய்வாளரும், பன்னூல் ஆசிரியருமான டி.ஞானையா அவர்கள் மரணமடைந்தார் என்ற செய்தி ஆழமான வருத்தங்களை அளிக்கிறது.

இளம் வயது முதல் தன்னை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இனைத்துக்கொண்டு அதில் செயல்வீரராகவும், சிந்தனையாளராகவும் இயங்கினார்.

ஜனசக்தியில் அவர் எழுதிய கட்டுரைகள் அனைவருக்கும் அரசியல் பாடங்களாக இருந்தன.

அவர் எழுதிய நூல்கள் யாவும் வரலாற்று மாணவர்களுக்கான பயிற்சி வகுப்புகளாக இருந்தன.

இந்திய முஸ்லிம் சமுதாயம் குறித்து அவர் எழுதிய கட்டுரைகள் யாவும், முஸ்லிம் சமுதாய தலைவர்கள் அனைவரும் ஆய்வு செய்யகூடிய அரிய தொகுப்புகளாக இருக்கின்றன.

அவரது மரணம் இடதுசாரி இயக்கத்திற்கும் நூலக உலகிற்கும் ஒரு பெரும் இழப்பு என்பதில் ஐயமில்லை.

அவரை இழந்து குடும்பத்தினர்கள், மற்றும் தோழர்கள் அவரது வாசகர்கள் உள்ளிட்ட அனைவரின் துயரத்திலும் மனித நேய ஜனநாயக கட்சியும் ஆழ்ந்த வருத்தத்துடன் பங்கேற்கிறது.

இவன்
M.தமிமுன் அன்சாரி,
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
09/07/2017