திருவாரூர்.மார்ச்.26., திருவாரூர் மாவட்ட மஜக சார்பில் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கொடி ஏற்றும் நிகழ்ச்சிகள் இன்று நடைபெற்றது . திருவாரூர் நகரம் , கொடிக்கால்பாளையம் மற்றும் இரவாஞ்சேரி ஆகிய பகுதிகளில் உள்ள 8 இடங்களில் மஜக கொடிகளை மஜக பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA, மாநிலச் செயலாளர் நாச்சிக்குளம். தாஜுதீன், மாநில துணைச் செயலாளர் தோப்புத்துறை H.சேக் அப்துல்லாஹ் ஆகியோர் ஏற்றினர் . இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் சீனி ஜெகபர் சாதிக், மாவட்ட பொருளாளர் ஜம் ஜம் சாகுல், மாவட்ட துணைச் செயலாளர்கள் அத்திக்கடை லியாகத் அலி கட்டிமேடு அய்யூப் கான் அடியக்கமங்கலம் நிஜாமுதீன் மாவட்ட தகவல்தொழில்நுட்ப அணி செயலாளர் பொதக்குடி அசாருதீன் வர்த்தக அணி செயலாளர் புலிவலம் ஷேக் அப்துல்லா தொழிற்சங்க அணி செயலாளர் புலிவலம் ஷேக் தாவூத், மீனவர் அணி செயலாளர் செய்யது மீரான் விவசாய அணி செயலாளர் பொதக்குடி நத்தர் கனி மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் கூத்தாநல்லூர் ஜபுருல்லாஹ் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட மஜக தொண்டர்கள் கலந்து கொண்டனர். தகவல்
இரண்டாம் ஆண்டில் மஜக
இரண்டாம் ஆண்டில் மஜக
மஜக திருச்சி மாநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்..!
திருச்சி.மார்ச்.24., மனிதநேய ஜனநாயக கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் இப்ராம்ஷா தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் பொருளாளர் அஷ்ரப் அலி துணை செயலாளர்கள் ஷேக்தாவூத், ஜம்ஜம் பஷீர், ரபீக், காட்டூர் பஷீர் ஆகியோர், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் மைதீன், தொழில்சங்க மாவட்ட செயலாளர் G.K.காதர், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் முஹம்மது அலி சேட் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆலோசனை கூட்டத்தில் ஆரோக்கியமாக சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.. #தீர்மானங்கள் 1.மஜக இரண்டாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கிளைகளில் கொடியேற்றி சிறப்பிப்பது எனவும், 2.கோடை காலங்களில் சுட்டெரிக்கும் வெயில் தாக்கத்தை போக்க பொதுமக்களுக்கு நீர்மோர், தண்ணீர் பந்தல் அமைப்பது எனவும், 3.மிக விரைவில் செயல்வீரர்கள் கூட்டம் நடத்த வேண்டும் என்றும் ஏக மனதாக முடிவுகள் எடுக்கப்பட்டன. தகவல் : தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி #MJK_IT_WINK திருச்சி மாவட்டம் 24.03.17
கரம்பக்குடியில் எழுச்சியாக நடந்த மஜகவின் அரசியல் எழுச்சி பொதுக்கூட்டம்…
புதுகை. மார்ச்.20., நேற்று புதுக்கோட்டை மாவட்டம் கரம்பகுடியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் "மாபெரும் அரசியல் எழுச்சி பொதுக்கூட்டம்'' வெகு சிறப்பாக நடைபெற்றது. மஜக புதுக்கோட்டை மாவட்ட துணை செயலாளர் கரம்பக்குடி முகம்மது ஜான் தலைமையில், நகர செயலாளர் S. அமீர் அம்ஷா வரவேற்புரை நிகழ்த்த பொதுக்கூட்டம் துவங்கியது. நிகழ்ச்சியின் துவக்கத்தில் தமுமுக, மமக போன்ற பல்வேறு இயக்கங்கள் மற்றும் கட்சிகளில் இருந்து பலர் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொது செயலாளர் முன்னிலையில் தங்களை மஜகவில் இணைத்துக் கொண்டனர். மஜக மாநில பொது செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA, தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா M. நாசர், மாநில செயலாளர் N.A. தைம்மியா, மாநில துணை பொது செயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷா ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினார்கள். முன்னிலை தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் ஏ. எம். ஹாரிஸ், புதுக்கோட்டை மேற்கு மாவட்ட செயலாளர் துரை முகம்மது, பொருளாளர் ரஹீம் தாலிப்,மாவட்ட துணை செயலாளர் அப்துல் ஹமீது, மாவட்ட மருத்துவ அணி செயலாளர் V. சீனிவாசன், புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் முபாரக் அலி, பொருளாளர் ஷேக் இஸ்மாயில், தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அகமது
குவைத் மண்டலம் மஜக இரண்டாம் ஆண்டு துவக்க விழா அழைப்பு…
குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவை இரண்டாம் ஆண்டு துவக்க விழா மற்றும் அரசியல் விழிப்புணர்வு கருத்தரங்கம் 14/04/2017 வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு முர்காப் ராஜ்தானி உணவகத்தில் நடைபெறுகிறது. மனிதநேய சொந்தங்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்க அன்போடு அழைக்கிறது. மனிதநேய கலாச்சார பேரவை மனிதநேய ஜனநாயக கட்சி MJK-IT-WING குவைத் மண்டலம் 55278478 - 55260018 - 60338005 - 65510446 E-mail: mjkkuwait@gmail.com Web : www.mjkparty.com
சேலம் மாவட்ட ஆலோசனை கூட்டம்!
சேலம்.மார்ச்.13., மனிதநேய ஜனநாயக கட்சியின் சேலம் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட செயலாளர் சாதிக் பாட்சா தலைமையில் 12-03-2017 அன்று நடைபெற்றது. மாவட்ட துணை செயலாளர்கள் மெஹபூப் அலி, முஸ்தபா, சேக் ரபீக், அம்ஜத் அலி, பாபு உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு எதிர்வரும் 20-03-2017 திங்கள் கிழமை மாலை பொதுக்கூட்டம் நடத்துவது என ஏக மனதாக முடிவு செய்யப்பட்டது. தகவல் : தகவல் தொழில்நுட்ப அணி மனிதநேய ஜனநாயக கட்சி #MJK_IT_WING சேலம் மாவட்டம்