​சேலம் மாவட்ட ஆலோசனை கூட்டம்!

சேலம்.மார்ச்.13.,  மனிதநேய ஜனநாயக கட்சியின் சேலம் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட செயலாளர் சாதிக் பாட்சா தலைமையில் 12-03-2017 அன்று நடைபெற்றது.

மாவட்ட துணை செயலாளர்கள் மெஹபூப் அலி, முஸ்தபா, சேக் ரபீக், அம்ஜத் அலி, பாபு உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு எதிர்வரும் 20-03-2017 திங்கள் கிழமை மாலை பொதுக்கூட்டம் நடத்துவது என ஏக மனதாக முடிவு செய்யப்பட்டது.
தகவல் : தகவல் தொழில்நுட்ப அணி

மனிதநேய ஜனநாயக கட்சி

#MJK_IT_WING

சேலம் மாவட்டம்