திண்டுக்கல்.ஜுன்.04., நரேந்திர மோடியின் மத்திய பாஜக பாசிச அரசின் மாட்டு அரசியலைக் கண்டித்து திண்டுக்கல் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் திண்டுக்கல் பேகம்பூரில் நேற்று 03.06.2017 சனிக்கிழமை மாலை 7-மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்டச் செயலாளர் ஹபீபுல்லா தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது. மஜக மாநில துணைச் செயலாளர் திண்டுக்கல் அன்சாரி சிறப்புரையாற்றினார். இணைப் பொதுச் செயலாளர் K.M.முகம்மது மைதீன் உலவி கண்டன உரையைப் பதிவு செய்தார். தன் கண்டன உரையில், வளர்ந்துவரும் நாடு என்ற பட்டியலிலிருந்து இந்தியாவை உலக வங்கி தூக்கி எறிந்து விட்டது.. சிறந்த நாடுகள் பட்டியலில் 22வது இடத்தில் இருந்த இந்தியா 25வது இடத்திற்கு பின் தள்ளப்பட்டதையும் நினைவு கூர்ந்த அவர், நாட்டை முன்னேற்றம் செய்வதை விட்டு விட்டு மத்திய பாஜக அரசு மாட்டு அரசியல் செய்வதை கண்டித்தார். இந்த நிகழ்வில் முஸ்லிமல்லாத மக்களும், பெண்களும் திரளாகக் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு முன் மாட்டிறைச்சியுடன் இஃப்தார் நிகழ்ச்சி நடை பெற்றது. தகவல்; தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. திண்டுக்கல் மாவட்டம். #MJK_IT_WING 03.06.2017
செய்திகள்
வேதை நகர மஜக சார்பில் சமூக நல்லிணக்கத்தை வளர்க்கும் நோன்பு கஞ்சி விநியோகம்…!
நாகை.ஜூன்.03., இன்று மனிதநேய ஜனநாயக கட்சி வேதாரண்யம் நகரத்தின் சார்பில் தோப்புத்துறையில் மாற்று மத சகோதரர்களுக்காக நோன்பு கஞ்சி விநியோகம் ஏற்பாடு செய்யப்பட்டது . சமூக நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்த நிகழ்வு அமைந்தது . சுமார் 300க்கும் மேற்பட்டவர்களுக்கு நோன்பு கஞ்சி, குளிர்பானம் வழங்கப்பட்டது . இந்நிகழ்ச்சிக்கு வேதை நகரச் செயலாளர் ஷேக் அகமதுல்லாஹ் தலைமை தாங்கினார்.மற்றும் ஏனைய நிர்வாகிகள் , உறுப்பினர்களும் கலந்து கொண்டு நோன்பு கஞ்சி விநியோகித்தனர் . தகவல்: தகவல் தொழில்நுட்ப அணி #MJK_IT_WING வேதாரண்யம் - நகரம் நாகை தெற்கு மாவட்டம் 03_06_17
கடலூரில் தபால் நிலையத்திற்கு பூட்டு… மஜக மாநில பொருளாளர் கைது…
கடலூர்.ஜூன்.03., இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் கடலூர் மாவட்டம் சார்பில் மாடுகள், ஒட்டகங்கள் இறைச்சிக்காக விற்க்கப்படுவதில் கட்டுப்பாடுகள் விதித்த மத்தியில் ஆளும் பாசிச பாஜக அரசை கண்டித்து கடலூர் தபால் நிலையம் முற்றுகையிட்டு பூட்டு போடும் போராட்டம் மற்றும் சட்ட நகல் எரிக்கும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் மஜக மாநில பொருளாளர் SS.ஹாரூன் ரசீது M.com தலைமையில் நடைபெற்றது. மிருகவதை தடை சட்டத்தில் திருத்தம் செய்யக்கோரியும், இறைச்சிக்காக மாடுகள், ஒட்டகங்கள் விற்க்கப்படுவதில் கட்டுப்பாடுகள் விதித்ததை மத்திய அரசு திரும்பப்பெறக் கோரியும், சென்னை IIT மாணவன் சூராஜ் தாக்கப்பட்டத்தை கண்டித்தும், சூராஜ்ஜை தாக்கிய ABVP குண்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரியும் இப்போராட்டத்தில் கடலூர் மஜக மாவட்ட செயலாளர் N.இப்ராஹிம், மாநில செயற்குழு உறுப்பினர் P.ஷாஜஹான், மாநில தலைமை கழக பேச்சாளர் கடலூர் மன்சூர், மாவட்ட துணை செயலாளர்கள் அஜ்மீர்கான், அஜிஸ், மாவட்ட மாணவர் இந்தியா செயலாளர் ரியாஸ் ரஹ்மான், இளைஞரணி துணை செயலாளர் மன்சூர், மாவட்ட மீணவரணி செயலாளர் சேட், கடலூர் நகர செயலாளர் இலியாஸ், மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் சிராஜ், நெய்வேலி நகர
கவிக்கோ இறுதி நிகழ்வில் மஜக தலைவர்கள் பங்கேற்பு…
சென்னை.ஜூன்.03., இன்று கவிக்கோ.அப்துல் ரஹ்மான் அவர்களின் ஜனாசா இறுதி தொழுகை சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கொட்டிவாக்கம் அல்நூர் பள்ளிவாசலில் நடைப்பெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பங்கேற்றார். அவருடன் மாநில செயலாளர்கள் N.தைமிய்யா, A. சாதிக் பாஷா, மாநில துணைச் செயலாளர் புதுமடம் அணிஸ், மாநில இளைஞர் அணி செயலாளர் ஷமிம் அகமது, மாநில விவசாய அணி செயலாளர் முபாரக் ஆகியோரும் பங்கேற்றனர். இலங்கை அமைச்சர் ரவுப் ஹக்கிம், பேராசிரியர் ஜவாஹிருல்லா, அப்துல் ரஹ்மான் (Ex .MP), செ.ஹைதர் அலி, கவிஞர் அறிவுமதி, சிலம்பொலி செல்லப்பனார், பத்திரிக்கையாளர் குலாம் முகம்மது, ஆளூர் ஷாநவாஸ், ஆவண பட இயக்குனர் பாரதி குமார், இயக்குனர் அமீர், M.G.K.நிஜாமுதீன், திருப்பூர் அல்தாப், தி.மு.அப்துல் காதர், கவிஞர் ஜெயபாஸ்கரன், மெளலவி.கான் பாகவி, மெளலவி. இல்யாஸ் ரியாஜி, யுனிவர்சல் ஷாஜகான், பேராசிரியர்.ஹாஜாகனி, ப.அப்துல் சமது, அப்பல்லோ.அனிபா, புரசைவாக்கம் சிக்கந்தர், அறிவிப்பாளர் பி.ஹெச்.அப்துல் ஹமீது, சிங்கப்பூர் முஸ்தபா, வெல்பர் பார்டி சிக்கந்தர், இயக்குனர் அகத்தியன். கோனிகா.பஷிர் ஹாஜியார், காயல் இளவரசு, இறையன்பன் குத்தூஸ் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் இறுதி நிகழ்ச்சியில்
கவிக்கோ இல்லத்தில் மஜக பொதுச் செயலாளர்..!
சென்னை.ஜுன்.03., சென்னை பனையூரில் உள்ள கவிக்கோ அவர்களின் இல்லத்திற்க்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினரும்மான M. தமிமுன் அன்சாரி MLA அவர்கள் வருகை தந்து அவரது உடலை பார்வையிட்டு மரியாதை செலுத்தினார்கள். மறைந்த கவிக்கோ மகள் வழி பேரன் டாக்டர் நசிர் அவர்களிடம் அவரது கடைசி நிமிடங்கள் பற்றி கேட்டறிந்தார்கள். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து விட்டு பிறகு அங்கிருந்த இரங்கல் பதிவேட்டில் தனது கருத்துகளை பதிவு செய்தார். அதில், சிந்தனை என்னும் ஆழ்கடலில் மூழ்கி முத்தெடுத்த பேரறிஞர் என்றும் காந்த வரிகளாலும், கந்தக சொற்களாலும் தமிழ் இலக்கிய உலகை வழிநடத்தியவர் என்றும், உலகின் சன்னலை தமிழ் இலக்கிய உலகிற்கு திறந்து காட்டியவர் என்றும் புகழாரம் சூட்டி இரங்கலை பதிவு செய்தார். அவருடன் மாநில விவசாய அணி செயலாளர் முபாரக், நாகை தெற்கு மாவட்ட பொருளாளர் பரக்கத் அலி, சகோ.ஜெய்னுதீன் ஆகியோர் உடன் இருந்தார்கள். தகவல்: தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி, #MJK_IT_WING சென்னை. 02.06.2017.