You are here

வேதை நகர மஜக சார்பில் சமூக நல்லிணக்கத்தை வளர்க்கும் நோன்பு கஞ்சி விநியோகம்…!

image

image

image

image

நாகை.ஜூன்.03., இன்று மனிதநேய ஜனநாயக கட்சி வேதாரண்யம் நகரத்தின் சார்பில் தோப்புத்துறையில் மாற்று மத சகோதரர்களுக்காக நோன்பு கஞ்சி விநியோகம் ஏற்பாடு செய்யப்பட்டது .

சமூக நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்த நிகழ்வு அமைந்தது . சுமார் 300க்கும் மேற்பட்டவர்களுக்கு நோன்பு கஞ்சி, குளிர்பானம் வழங்கப்பட்டது .

இந்நிகழ்ச்சிக்கு வேதை நகரச் செயலாளர் ஷேக் அகமதுல்லாஹ் தலைமை தாங்கினார்.மற்றும் ஏனைய நிர்வாகிகள் , உறுப்பினர்களும் கலந்து கொண்டு நோன்பு கஞ்சி விநியோகித்தனர் .

தகவல்:
தகவல் தொழில்நுட்ப அணி
#MJK_IT_WING
வேதாரண்யம் – நகரம் நாகை தெற்கு மாவட்டம்
03_06_17

Top