கடலூர்.ஜூன்.03., இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் கடலூர் மாவட்டம் சார்பில் மாடுகள், ஒட்டகங்கள் இறைச்சிக்காக விற்க்கப்படுவதில் கட்டுப்பாடுகள் விதித்த மத்தியில் ஆளும் பாசிச பாஜக அரசை கண்டித்து கடலூர் தபால் நிலையம் முற்றுகையிட்டு பூட்டு போடும் போராட்டம் மற்றும் சட்ட நகல் எரிக்கும் போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டம் மஜக மாநில பொருளாளர் SS.ஹாரூன் ரசீது M.com தலைமையில் நடைபெற்றது.
மிருகவதை தடை சட்டத்தில் திருத்தம் செய்யக்கோரியும், இறைச்சிக்காக மாடுகள், ஒட்டகங்கள் விற்க்கப்படுவதில் கட்டுப்பாடுகள் விதித்ததை மத்திய அரசு திரும்பப்பெறக் கோரியும், சென்னை IIT மாணவன் சூராஜ் தாக்கப்பட்டத்தை கண்டித்தும், சூராஜ்ஜை தாக்கிய ABVP குண்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரியும்
இப்போராட்டத்தில் கடலூர் மஜக மாவட்ட செயலாளர் N.இப்ராஹிம், மாநில செயற்குழு உறுப்பினர் P.ஷாஜஹான், மாநில தலைமை கழக பேச்சாளர் கடலூர் மன்சூர், மாவட்ட துணை செயலாளர்கள் அஜ்மீர்கான், அஜிஸ், மாவட்ட மாணவர் இந்தியா செயலாளர் ரியாஸ் ரஹ்மான், இளைஞரணி துணை செயலாளர் மன்சூர், மாவட்ட மீணவரணி செயலாளர் சேட், கடலூர் நகர செயலாளர் இலியாஸ், மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் சிராஜ், நெய்வேலி நகர செயலாளர் நூர்முகமது, மங்களம்பேட்டை நகர செயலாளர் பைசல்,பென்னடம் ஒன்றிய செயலாளர் உஸ்மான் ஆகியோர் உடன் கலந்துகொண்டனர்.
மேலும் மாவட்ட, பகுதி, கிளை, வார்டு நிர்வாகிகள், மாடு மற்றும் இறைச்சி வியாபாரிகள் உள்ளிட்ட ஏராளமான மனிதநேய சொந்தங்கள் கலந்துக்கொண்டு கைதாகினர்.
மேலும் தபால் நிலையத்திற்குள் நுழைய முயற்சித்தபோது போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
தகவல்;
தகவல் தொழில்நுட்ப அணி,
மனிதநேய ஜனநாயக கட்சி,
கடலூர் மாவட்டம்.
#MJK_IT_WING
03.06.2017