ஆக.07., இன்று (07.08.2016) திருச்சியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஆழ்வார்தோப்பு, பீமாநகர், கூனிபஜார், நத்தர்ஷா தர்கா ஆகிய இடங்களில் ம.ஜ.க கொடியினை பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் ஏற்றி வைத்தார். இந்நிகழ்வுகளில் ஏராளமான புதிய இளைஞர்களும், மாணவர்களும் ம.ஜ.க வில் தங்களை இணைத்துக்கொண்டனர்.
பிறகு ஆழ்வார்தோப்பில் கட்சியின் அலுவலகத்தை திறந்து வைத்து அனைவருக்கும் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கினார்.
மதியம் திருச்சி மாநகர் 49வது வார்டு கிளை செயலாளர் பக்கீர் முகைதீன் இல்லத் திருமண விழாவிற்கு சென்று மணமக்களை வாழ்த்தினார்.
அங்கு ஜமாத்தினரும், உலமாக்களும் பொதுச்செயலாளரை சந்தித்து அவரது சட்டமன்ற பணிகளை பாராட்டினர்.
இடஒதுக்கீடு, சிறைவாசிகள், உலமாக்கள் ஓய்வூதியம் ஆகிய விஷயங்களில் சட்டசபையில் பேசியதற்கு பாராட்டுக்களையும் நன்றியையும் அவர்கள் தெரிவித்துக்கொண்டனர்.
தகவல்: மஜக ஊடகப்பிரிவு திருச்சி.