ஈழத் தமிழர்களின் பாதுகாப்பு குறித்து ராஜபக்க்ஷேவிடம் பிரதமர் மோடி வலியுறுத்த வேண்டும் : மு.தமிமுன் அன்சாரி MLA பேட்டி!

நவ.29,

இன்று ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, சேலம் மாவட்ட மஜக நிர்வாகிகளை சந்திப்பதற்காக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்கள் ஈரோடு வருகை தந்தார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:-

“இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலையை முன்னின்று நடத்தியவர் தான் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்க்ஷே!

அவர் தனக்கு வாக்களிக்காத கோபத்தில் ஈழ தமிழர்கள் வாழுமிடங்களில் ஆயுதம் தாங்கிய படை வீரர்களை நிறுத்தி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறார்.

கடந்த 10 ஆண்டுகளில் தமிழர் பகுதிகளில் எந்த அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை. அப்படியிருக்கும் போது, ஏன் இந்த இராணுவ ரோந்து?

அங்கு மொழி மற்றும் மத சிறுபான்மையினர் சம அளவில் நடத்தப்பட வேண்டும்.

இந்தியாவின் புவிசார் அரசியல் நலன் கருதி அவரை இந்தியாவுக்கு வரவழைத்திருக்கிறார்கள்.

இதை எதிர்த்து போராட்டங்கள் நடைபெறும் நிலையில், பிரதமர் மோடி அவர்கள், இலங்கை வாழ் தமிழ் பேசும் சகல மக்களின் பாதுகாப்பு மற்றும் நலன்கள் குறித்து ராஜபக்க்ஷேவிடம் வலியுறுத்த வேண்டும்.

சென்னை IIT யில் தற்கொலை செய்துக் கொண்டதாக கூறப்படும் மாணவி பாத்திமாவின் மர்ம மரணம் குறித்த விசாரணையில் இதுவரை உயர் சாதி சமூகத்தவர் என கூறப்படும் பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அவர்களை கைது செய்யாமல் தடுக்கும் சக்தி எது? என தெரிய வேண்டும்.

BC, MBC, SC சமூகங்களை சேர்ந்த 14 மாணவ, மாணவிகள் கடந்த 10 ஆண்டுகளில் அங்கு தற்கொலை செய்துள்ளதால், அந்த மர்ம தேசத்தில் என்ன நடக்கிறது என்பதை அறிய தமிழக அரசு ஒரு உண்மை அறியும் குழுவை நியமிக்க வேண்டும்.

தமிழ் நாட்டின் முக்கிய நதியான காவிரி பல இடங்களில் மாசுப்படுத்தப்படுகிறது. எனவே, காவிரியை பாதுகாக்கப்பட்ட நதியாக தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் அறிவிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேஷ் IPS மீது அவர் பாராபட்சத்துடன் ஒரு சார்பாக செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதால், அவரை பணியிட மாற்றம் செய்வதோடு, DGP அவர்கள் அவருக்கு உரிய அறிவுரைகள் வழங்கிட வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம்.”

இவ்வாறு அவர் பேட்டியளித்தார்.

பேட்டியின் போது துணைப் பொதுச் செயலாளர் செய்யது முகம்மது பாரூக், மாநில துணைச் செயலாளர் பாபு ஷாகின்ஷா ஆகியோர் உடனிருந்தனர்.

பிறகு பொதுச் செயலாளர் அவர்கள், ஈரோடு மேற்கு தொகுதி MLA., K.V.ராமலிங்கம், ஈரோடு கிழக்கு தொகுதி MLA., K.S.தென்னரசு ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.

பிறகு சுல்தான்பேட்டை மர்கஸ் பள்ளிக்கு ஜூம்மாவுக்கு வருகை தந்து, அங்குள்ள ஜமாத்தினர்களை சந்தித்து பேசினார். அடுத்து சிட்டி ஹாஸ்பிடலுக்கு வருகை தந்து டாக்டர் K.M.அபுல் ஹஸன் அவர்களை சந்தித்து உரையாடினார். அவரது பல்வேறு அறிவு சார் திட்டப் பணிகளை பாராட்டினார்.

முன்னதாக ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, சேலம் ஆகிய மாவட்டங்களின் நிர்வாகிகளை சந்தித்து, கட்சி வளர்ச்சி குறித்து கலந்துரையாடினார்.

அப்போது அதிமுக, திமுக, காங்கிரஸ், விசிக கட்சிகளை சேர்ந்தவர்கள் அவரை மரியாதை நிமித்தமாத சந்தித்து சால்வை அணிவித்து சிறப்பு செய்தனர்.

இந்நிகழ்வில், ஈரோடு கிழக்கு மாவட்ட மஜக செயலாளர் ஷஃபிக் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர் எக்ஸானுல்லா, மாவட்ட பொருளாளர் முகம்மது அலி, மாவட்ட துணைச் செயலாளர்கள் செய்யது முஸ்தபா, ஆடிட்டர் ரியாஸ், MJVS மாவட்ட செயலர் சிராஜ், இளைஞர் அணி செயலர் திலீப், பகுதி செயலாளர்கள் பாரூக், பாபு, ஜாஹீர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தகவல் ;

மஜக தகவல் தொழில்நுட்ப அணி
MJKitWING
ஈரோடு கிழக்கு மாவட்டம்.