மஜக மத்திய சென்னை கிழக்கு மாவட்ட சிறப்பு நிர்வாகக்குழு கூட்டம்.!


சென்னை.ஆகஸ்ட்.10.,

மனிதநேய ஜனநாயக கட்சியின்
மத்திய சென்னை கிழக்கு மாவட்ட சிறப்பு நிர்வாகக்குழு கூட்டம் மாவட்டச் செயலாளர் பிஸ்மில்லாஹ்கான் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் எதிர்வரும் சுதந்திர தினத்தன்று மாவட்டம் முழுவதும் சமூக இடைவெளியுடன் தேசிய கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடத்துவது குறித்தும், கட்சி வளர்ச்சிப் பணிகள் மற்றும் தீவிர உறுப்பினர் சேர்க்கை நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்டப் பொருளாளர். A.அமீர் அப்பாஸ், மாவட்ட துணைச்செயலாளர்கள் T. ரவூப் ரஹீம், காஜாமைதீன், மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் அப்துல் கரீம் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள், அணி செயலாளர்கள், பகுதிச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#மத்தியசென்னை_கிழக்கு
07-08-2020