தஞ்சை.ஆக.10., மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மாதங்கள் நன்கொடை சேகரிப்பு மாதங்களாக அறிவிக்கப்பட்டதையொட்டி, நன்கொடை சேகரிப்பு நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று (10.08.2017) தஞ்சாவூரில் மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரிMLA , துணைப் பொதுச்செயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷா ஆகியோர் மாவட்ட நிர்வாகிகளுடன் நன்கொடை சேகரிப்பை தொடங்கி வைத்து, பிரமுகர்கள் சந்திப்பும் நடத்தி துண்டு பிரசுரங்களை வழங்கினர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING தஞ்சை தெற்கு மாவட்டம். 10.08.17
செய்திகள்
பாராளுமன்றத்தில் தமிழை இழிவுபடுத்துவதா? தனியரசு, தமிமுன் அன்சாரி, கருணாஸ் கண்டனம்!
(தமிழக கொங்கு இளைஞர் பேரவை நிறுவனத்தலைவர் உ.தனியரசு MLA, மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் M.சேது கருணாஸ் MLA ஆகியோர் கூட்டாக வெளியிடும் அறிக்கை) நேற்று நாடாளுமன்றத்தில் துணை சபாநாயகர் மாண்புமிகு தம்பிதுரை அவர்கள் தமிழில் பேசும்போது அதற்கு நாடாளுமன்றத்தில் வட இந்திய எம்.பிக்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். இதனால் அவர் தமிழில் பேசுவதை நிறுத்திவிட்டு ஆங்கிலத்தில் பேசியிருக்கிறார். இது தமிழை அவமதிக்கும் செயலாகும் அப்பட்டமான மொழிவெறி என்பதிலும் ஐயமில்லை. இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட மொழியாக தமிழ் இருக்கிறது. நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட எந்த மொழியிலும் பேசலாம் என்று விதி இருக்கிறது. இந்தியில் ஒருவர் பேச உரிமை இருக்கும்போது, தமிழிலும் பேச உரிமை இருக்கிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டை சேர்ந்த துணை சபாநாயகர் தமிழில் பேசியதை இடையூறு செய்து தடுத்து நிறுத்தியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. வேற்றுமையில் ஒற்றுமை என்ற தேசிய ஒருமைப்பாட்டிற்கு எதிரான இது போன்ற செயல்கள் நாடாளுமன்றத்திலேயே அரங்கேறுவது கடும் வேதனையளிக்கிறது. தமிழர்களை நோகடிக்கும் இதுபோன்ற செயல்களை அனுமதிக்க முடியாது. இது குறித்து பிரதமர் மோடி அவர்கள் நாடாளுமன்றத்தில் உரிய விளக்கம் அளித்து , இதுபோன்ற
சகோ.தாரிக் அவர்கள் நல்லடக்கத்தில் மஜக மாநில பொருளாளர்.
தேனி.ஆக.10., தமுமுகவின் முன்னாள் தேனி மாவட்ட பொருளாளர் சகோ.தாரிக் அவர்கள் நேற்று 09/08/17 இரவு வபாத்தானார்கள். தகவல் அறிந்த மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரசீது அவர்கள் தாரிக் அவர்களின் நல்லடக்கத்தில் கலந்து கொண்டு அவரின் குடும்பத்தார்களுக்கு ஆறுதல் கூறினார். உடன் மாநில துணைப் பொதுச் செயலாளர் மன்னை செல்லசாமி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில துணைச் செயலாளர் சிக்கந்தர் பாட்ஷா, மாநில செயற்குழு உறுப்பினர் கம்பம் கரிம், கம்பம் தன்விர் மற்றும் தேனி மாவட்டச் செயலாளர் ரியாஸ், மாவட்ட பொருளாளர் பெரியகுளம் ஷேக், துணைச் செயலாளர்கள் என்.டி.பட்டி அனிஸ், ஜாஃபர், காதர், கம்பம் நகரசெயலாளர் அயூப்கான், மருத்துவ சேவை அணிச் செயலாளர் லியாகத் அலி, கம்பம் நகர நிர்வாகிகள், பெரியகுளம் நிர்வாகிகள், கேளம்பாக்கம் அன்வர், இளையான்குடி முத்து முஹம்மது, உஸ்மான் ஆகியோர் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING தேனி மாவட்டம் 10.08.17
மஜக தேனி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்! மாநில பொருளாளர் பங்கேற்பு..!!
தேனி.ஆக.10., மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) தேனி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கேரளா ராமக்கல்மெட்டு பகுதியில் நேற்று நடந்தது. மாவட்ட செயலாளர் கம்பம் ரியாஸ் தலைமையில், மாவட்ட பொருளாளர் பெரியகுளம் ஷேக், மாவட்ட துணை செயலாளர்கள் என்.டி.பட்டி அனிஸ், காதர், ஜாஃபர், கம்பம் தன்விர், மாநில துணை பொதுசெயலாளர் மன்னை செல்லசாமி, ஊடகபிரிவு துனை செயலாளர் சிக்கந்தர், மாநில செயற்குழு உறுப்பினர் கம்பம் கரிம் ஆகியோருடன் தேனி, கம்பம், பெரியகுளம் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இக்கூட்டதில் பேசிய மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரசீது M.com அவர்கள் கம்பம், தேனி, பெரியகுளம், உத்தமபாளையம் மற்றும் பல பகுதிகளிள் புதிய நிர்வாகிகளை இனைப்பது கட்சி கொடிகளை அனைத்து பகுதிகளிலும் ஏற்றுவது மற்றும் நிர்வாகிகளுக்கு கட்சியை பலபப்டுத்துவது பற்றி ஆலோசனை வழங்கினார்கள். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING தேனி மாவட்டம். 09.08.17
தமிழக முதல்வருக்கு தனியரசு, தமிமுன் அன்சாரி, கருணாஸ் கூட்டாக நினைவூட்டல் கடிதம்!
ஆயுள் தண்டனை கைதிகளை முன் விடுதலை செய்க! பேரறிவாளனுக்கு பரோல் வழங்குக! தமிழக முதல்வருக்கு தனியரசு, தமிமுன் அன்சாரி, கருணாஸ் கூட்டாக நினைவூட்டல் கடிதம்! தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு MLA , மஜக பொதுச்செயலாளர் M. தமிமும் அன்சாரி MLA, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் MLA ஆகியோர் தமிழக முதல்வருக்கு கூட்டாக கையெழுத்திட்டு இன்று (10.08.17) கடிதம் எழுதியுள்ளனர். இன்று தலைமை செயலகத்தில் ஒப்படைக்கப்பட்ட அக்கடிதத்தில் கூறியிருப்பதாவது.... நீண்ட காலமாக சிறையில் வாடும் பேரறிவாளனுக்கு பரோல் வழங்கக் கோரியும், ஐயா MGR அவர்களின் நூற்றாண்டு விழாவையொட்டி, 10 ஆண்டுகளை கடந்து சிறையில் வாடும், பல்வேறு வழக்குகளில் ஆயுள் தண்டனை பெற்ற கைதிகளை முன்விடுதலை செய்வது குறித்து நாங்கள் சட்டமன்றத்தில் பேசியுள்ளோம். தங்களிடம் நேரிலும் விரிவாக வலியுறுத்தி பேசியுள்ளோம். இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக சட்டமன்றத்தில் தாங்கள் பதிலளித்தது எங்களுக்கு ஆறுதலாக இருந்தது. இவ்விஷயத்தில் கால தாமதம் செய்யாமல் வாய்ப்பிருந்தால்; ஆகஸ்ட் 15 அன்று 71 வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு உரிய அறிவிப்புகளை இது குறித்து வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். இதில் மனிதநேயத்தோடு தாங்கள் எடுக்கும் முயற்சிகளை வருங்காலமும் வரலாறும்