You are here

​தமிழ் மாணவர் முத்துக்கிருஷ்ணன் மரணத்துக்கு சி.பி.ஐ விசாரணை தேவை!மனிதநேய ஜனநாயக கட்சி கோரிக்கை!

(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் அறிக்கை)

உலகப் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மாணவராக பயின்று வந்த தமிழகத்தை சேர்ந்த ஜீ.முத்துக்கிருஷ்ணன் அவர்கள் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ள செய்தி நாடு முழுக்க அறிவு சார் தளங்களில் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

IIT,AIMS உள்ளிட்ட இந்திய உயர் கல்வி நிறுவனங்களில் ஃபாஸிஸமும்,ஏகாதிபத்திய போக்குகளும் தலைவிரித்தாடி வரும் நிலையில் இம்மரணமும் பல்வேறு ஐயங்களை உருவாக்கியுள்ளது.

எனவே இதுகுறித்து சி.பி.ஐ விசாரணை தேவை என்றும்,மனிதாபிமான அடிப்படையில் ஜீ. முத்துக்கிருஷ்ணன் குடும்பத்திற்கு தமிழக அரசு இழப்பீடு தொகையை வழங்க வேண்டும் என்றும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
இவண்,

M.தமிமுன் அன்சாரி MLA

பொதுச்செயலாளர்

மனிதநேய ஜனநாயக கட்சி

15_03_17

#MJK_IT_WING

Top