You are here

​மாணவர் இந்தியா கோரிக்கை ஏற்று சாலை அமைப்பு…


சென்னை.மார்ச்.16., வடசென்னை புளியந்தோப்பு இராமசாமி தெருவில் நீண்ட நாட்களாக குண்டும் குழியுமாக இருந்த சாலையால் மக்கள் பல்வேறு அவதிகளை சந்தித்து வந்தனர்.
 மக்களின் இன்னல்களை அறிந்து அப்பகுதியில் வசித்து வரும்  மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் தீன் “அம்மா புகார் மையம்” தொலைபேசி எண்: 1100 தொடர்பு கொண்டு சாலை இல்லாமல் மக்கள் படும் இன்னல்களை விவரித்து புகாரை பதிவு செய்தார்.
புகார் எண் : 17011000643 மீது நடவடிக்கை எடுக்க நகராட்சி அதிகாரிகள் மாவட்ட செயலாளர் தீனை தொடர்பு கொண்டு சாலையின் விவரங்களை கேட்டறிந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தனர்.

அதனடிப்படையில் நடவடிக்கை எடுத்த நகராட்சி அதிகாரிகள் புதிய சாலை அமைத்து மாவட்ட செயலாளர் தீனை தொடர்பு கொண்டு புகார் எண் : 17011000643 மீது  நடவடிக்கை எடுத்து சாலை அமைத்துவிட்ட தகவலை பதிவு செய்தனர். புகார் பதிவு செய்து ஒரு வார காலத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்த நகராட்சி அதிகாரிகளுக்கு மாணவர் இந்தியா சார்பாக தீன்  நன்றியை தெரிவித்தார்.
தகவல் : ஊடகபிரிவு.

மாணவர் இந்தியா,

வடசென்னை மாவட்டம்.

16.03.2017

#Maanavar_India

Top