(2017-2018)-ம் ஆண்டிற்கான வரவு-செலவு அறிக்கை குறித்து மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி,MLA வெளியிடும் அறிக்கை)
2017-2018-ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை எளியவர்களின் எண்ண ஓட்டங்களை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பதாக மனிதநேய ஜனநாயக கட்சி கருதுகிறது.
கடந்த நிதி நிலை அறிக்கையில் முன்னாள் முதல்வர் மாண்புமிகு அம்மா அவர்களால் அறிவிக்கப்பட்ட நீர் ஆதார மேலாண்மை, வறுமை ஒழிப்பு, ஏழைகளுக்கான வீட்டுவசதி, திறன் மேம்பாடு, தூய்மை தமிழ்நாடு, ஆகிய ஐந்து அம்ச திட்டக் கொள்கைகைகள் இந்த நிதிநிலை அறிக்கையில் பின்பற்றப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.
• வறுமை ஒழிப்பிற்காக 741.12 கோடி ஒதுக்கீடு.
• தமிழ் வளர்ச்சித்துறைக்காக 48 கோடி ஒதுக்கீடு.
• மீனவர்களுக்கு புதிதாக 5 ஆயிரம் வீடுகள் கட்ட 85 கோடி ஒதுக்கீடு.
• நாகப்பட்டினம் உள்ளிட்ட மீன் பிடித் துறைமுகங்களை நவீனப்படுத்த
1105 கோடிக்கு ஒப்புதல்.
• அத்திக்கடவு – அவினாசி குடிநீர் திட்டத்திற்காக 250 கோடி ஒதுக்கீடு.
• நீர்வள ஆதாரத்துறைக்கு 4791 கோடி ஒதுக்கீடு.
• பள்ளிக் கல்விக்காக 26,932 கோடியும், உயர்க் கல்விக்காக 3,680 கோடியும் ஒதுக்கீடு.
• இலங்கை தமிழ் அகதிகள் நலனுக்காக 116 கோடி ஒதுக்கீடு.
• மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக 466 கோடி ஒதுக்கீடு ஆகிய விஷயங்கள் பாராட்டப்படக்கூடியதாகும்.
அதே சமயம், சிறுபான்மை மக்களுக்காக குறிப்பிட்டு சொல்லக்கூடிய விஷயங்கள் ஏதுமில்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. இந்த அரசு எதிர்காலத்தில் கவனத்தில் கொண்டு இக்குறையை சரிசெய்யும் என்று நம்புகிறோம்.
இவண்:
M.தமிமுன் அன்சாரி MLA
பொதுச் செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
16/03/2017