புது தில்லி JNU பல்கலைகழகத்தில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் முத்துகிருஷ்ணன் மர்மமான முறையில் உயிர்ழந்ததின் பின்னணியில் அனைத்து தரப்பினராலும் சந்தேகம் இருப்பதாக கருதப்படுகிறது.
ஹைதராபாத் பல்கலைகழக மாணவர் ரோஹித் வேமுலா, எய்ம்ஸ் பல்கலைகழக மாணவர் சரவணன், என மத்திய பல்கலைகழகத்தை சேர்ந்த சிறுபான்மை மற்றும் தலித் மாணவர்கள் தொடர்ந்து மர்மமான முறையில் உயிரிழப்பதும். காணலாம் போய் 4மாதங்கள் ஆகியும் ஜே.என்.யூ பல்கலைகழக மாணவர் நஜிப் அஹமது இது வரையில் என்ன ஆனார் என்று தெரியாத நிலையில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதை மாணவர் இந்தியா வன்மையாக கண்டிக்கிறது.
உயிரிழந்த முத்துக்கிருஷ்ணன் தனது முகநூல் பக்கத்தில் கடைசியாக பேராசிரியர்களும் சாதி வேறுபாடு பார்ப்பதாகவும், பல்கலைகழக சேர்க்கையில் சம அளவிலான வாய்ப்புகள் பின்பற்றப்பட்டவில்லை என்பதை பதிவு செய்துள்ளார், ரோஹித் வெமுலா படுகொலையை தொடர்ந்து முத்துகிருஷ்ணனின் மர்ம மரணம் பாஜக மற்றும் ஏ.பி.வி.பி அமைப்புகளைச் சேர்ந்த குண்டர்களாக இருக்குமோ என்கிற சந்தேகத்தை எழுப்புகிறது.
கல்வி பயிலும் மாணவர்கள் மதம் மற்றும் சாதி ரீதியிலான துன்பத்திற்கு ஆளாக்கப்படுவது நாட்டின் ஜனநாயகத்தை கேள்விக்குரியாக்கியுள்ளது.
பல்கலைகழக சேர்க்கையில் இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்பட வேண்டும், தற்கொலைக்கான உண்மையான காரணத்தை கண்டுபிடிக்க ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரனை கமிஷன் அமைக்க வேண்டும் என மாணவர் இந்தியா சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் முத்துகிருஷ்ணனின் மர்ம மரணத்தில் நீதி கிடைக்கும் வரை மாணவர் இந்தியா போராடும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவண்…
முஹம்மது அஸாருதீன்,
மாநில செயலாளர்
மாணவர் இந்தியா.
15.03.2017