You are here

நெல்லை பொன் ரா மருத்துவ மனைக்கு மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA வருகை!


நெல்லை:நவ.20.,

திருநெல்வேலி நகரில் சிறப்பாக செயல்படும் பொன் ரா மருத்துவ மனைக்கு மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA நேற்று வருகை தந்தார்.

இங்கு கிட்னி டயாலிசிஸ் சேவைக்கு , அவர் அரசு காப்பீடு திட்டத்தை பெற்றுக் கொடுத்தார். இதற்காக இம்மருத்துவமனைக்கு வருகை தந்த அவருக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தனர்.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் பரிந்துரைத்து துரிதமாக அதை செய்து கொடுத்ததை மறக்க மாட்டோம் என்று நன்றி பாராட்டினர்.

தனது முயற்சியால் ஏழை எளியவர்கள் கட்டணமின்றி டயலிசிஸ் செய்து பயனடைவதை பார்க்கும் போது மனதிருப்தி அடைவதாகவும், இப்பணியை செய்து தர இறைவன் தனக்கொரு நல் வாய்ப்பை தந்ததாகவும் பொதுச் செயலாளர் அவர்களிடம் கூறினார்.

தகவல்,

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#நெல்லை_மாவட்டம்
19.11.2020

Top