நெல்லை பேட்டையில் மஜக கொடியேற்றல் பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA பங்கேற்பு.!


நவ.20.,

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க நெல்லை மாவட்டத்திற்கு வருகை புரிந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள், நெல்லை மாவட்டம் பேட்டையில் மருத்துவமனை பேருந்து நிறுத்தம் மற்றும் மீனாட்சி திரையரங்கம் அருகில், ஆகிய இரண்டு இடங்களில் மஜக கொடிகளை தொண்டர்களின் எழுச்சி முழக்கங்களுக்கிடையே ஏற்றி வைத்தார்.

அவருடன் துணைப் பொதுச் செயலாளர் மண்டலம் ஜெய்னுலாபுதீன், மாநிலச் செயலாளர் நாச்சிக்குளம் தாஜ்தீன் ஆகியோரும் உடன் பங்கேற்றனர்.

மேலும் மாநில துணைச் செயலாளர் காயல் சாகுல் ஹமீது, மாவட்ட செயலாளர் நிஜாம், பொருளாளர் மூஸா, காஞ்சி ஜிந்தா மதார், மாவட்ட துணை செயலாளர்கள் இரா.முத்துக்குமார், A1 காயல் மைதீன், செய்யதுஅலி, மாவட்ட அணி செயலாளர்கள் அப்பாஸ், புகாரி, மன்சூர், ஜாஹிர், கலீல், அப்துல்லாஹ் உள்ளிட்ட மாவட்ட, நகர, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#நெல்லை_மாவட்டம்
19-11-2020