வேதாரண்யம் தொகுதியில் மூன்றாம் கட்ட மஜக உறுப்பினர் சேர்ப்பு முகாம்!


நாகை.நவ.20,

வேதாரண்யம் தொகுதி கரியாப்பட்டினத்தில் மஜக வின் 75 நாட்கள் உறுப்பினர் சேர்க்கை முகாம் மக்கள் வரவேற்புடன் நடைப்பெற்றது.

ஆர்வத்துடன் பங்கேற்றவர்களுக்கு 15 நாட்களுக்குள் உறுப்பினர் அட்டை வழங்கப்படும் என்றும், புகைப்படம் தராதவர்களுக்கு புகைப்படமின்றி உறுப்பினர் அட்டை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இம்முகாம் வேதாரண்யம் தொகுதியில் நடத்தப்படும் 3 வது கட்ட முகாம் ஆகும். தொடர்ந்து டிச.31 வரை பல்வேறு பகுதிகளில் இம்முகாம்கள் முன்னெடுக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

மாவட்ட துணைச் செயலாளர் ஷேக் அகமதுல்லா தலைமையில் நடைப்பெற்ற இந்நிகழ்வில், மஜக நகர நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தகவல் ;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING #MJK2021
#நாகை_மாவட்டம்.