You are here

வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்! களப்பணியில் மஜகவினர்!


நவ.21,
தமிழகமெங்கும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு நவ.21,22 மற்றும் டிச.12,13 ஆகிய தேதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இம்முகாமில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட விண்ணப்பங்களை அளிக்கலாம்.

நாகை மாவட்டம் திட்டச்சேரி பேரூர் மஜக வினர் இம்முகாம் குறித்து மக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வாயிலாக அறிவிப்பு செய்ததுடன் பொதுமக்களுக்கு உதவிடும் வகையில் முகாம்களில் களப்பணியிலும் ஈடுப்பட்டு வருகின்றனர்.

தொடர்ந்து நாளை மற்றும் டிச.12,13 ஆகிய தினங்களில் நடைப்பெற உள்ள முகாமிலும் பொதுமக்களுக்கு உதவிட உள்ளதாக அப்பகுதி மஜகவினர் தெரிவித்தனர்.

இதைப்போன்று தமிழகமெங்கும் பல்வேறு பகுதிகளில் மஜகவினர் சிறப்பு முகாம்களில் பொதுமக்களுக்கு உதவி வருவது குறிப்பிடத்தக்கது.

தகவல் ;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#நாகை_மாவட்டம்.

Top