நாகை ஆரியநாட்டு தெருவில் மீன்பிடி இறங்கு தள அடிகல் நாட்டு விழா! அமைச்சர், MLA, கலெக்டர் பங்கேற்ப்பு!

நாகை.ஜூன்.11., நாகப்பட்டினம் ஆரிய நாட்டு தெரு மீனவர்கள் கிராமத்தில் ₹1.63 லட்சம் மதிப்பில் மீன்பிடி இறங்கு தளம் மற்றும் வலைப்பின்னும் தளம் ஆகியவை அமைக்க தமிழக அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. இதன் அடிகல் நாட்டு விழா நேற்று (10.06.18) நடைப்பெற்றது.

இதில் மாண்புமிகு அமைச்சர் #OS_மணியன், மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் #மு_தமிமுன்_அன்சாரி, மாவட்ட ஆட்சித் தலைவர் #சுரேஷ்_குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் #கோடிமாரி, #தங்க_கதிரவன், மற்றும் மீன் வளத்துறை அதிகாரிகளும் பங்கேற்றனர்.

நிகழ்ச்சிக்கு பிறகு கிராம மீனவ பஞ்சாயத்தார் ஏற்பாடு செய்த நன்றி கூட்டத்தில் பேசிய மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள், தனது வாக்குறுதிகளில் ஒன்றை நிறைவேற்றிக் கொடுத்திருப்பதாகவும், இதற்கு ஒப்புதல் வழங்கிய #முதல்வர் எடப்பாடியார் அவர்களுக்கும், மீன்வளத்துறை #அமைச்சர் ஜெயக்குமார் அர்களுக்கும், கோரிக்கைக்கு துணை நின்ற அமைச்சர் O.S மணியன் அவர்களுக்கும் இத்தருணத்தில் நன்றி தெறிவித்துக் கொள்வதாக கூறினார்.

தகவல்;
#நாகை_சட்டமன்ற_உறுப்பினர்_அலுவலகம்,
11/06/2018.