வேலூர்.ஜுன்.10, வேலூர் மேற்கு மாவட்டம் குடியாத்தம் நகர #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் சார்பாக #இஃப்தார் என்னும் நல்லிணக்க நிகழ்ச்சி MBS.திருமண மண்டபத்தில் நகர செயலாளர் S.அனீஸ் தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது.
இதில் வேலூர் மே மாவட்ட செயலாளர் I.S.முனவ்வர் ஷரீப் வரவேற்புரை நிகழ்த்தினார்.
வேலூர் மே மாவட்ட பொருளாளர் S.MD.நவாஸ், மற்றும் மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் S.M.நிஜாமுத்தீன் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக மஜக மாநில இளைஞர் அணி செயலாளர் அப்சர் சையத் MBA,மாநில இளைஞர் அணி பொருளாளர் A.மன்சூர் அஹ்மத், மாநில இளைஞர் அணி துணை செயலாளர் செயலாளர் அன்வர் பாஷா,கிழக்கு மாவட்ட செயலாளர் முஹம்மத் யாசீன், மாவட்ட துணை செயலாளர்கள்.சையத் உசேன்,ஜாகீர் முஹம்மத் பைஸ் அகியோர் கலந்து கொண்டனர்.
பல்வேறு அரசியல் கட்சியின் பிரமுகர்களான:- S.அருணோதயம் (த.மா.க), ம.விவேகானந்தன்(திமுக), ஏ.நித்யானந்தன்( அமமுக), கு.குமரேசன் (விசிக), ரஹ்மதுல்லாகான் (IUML),சின்னதம்பி(CPI),
ஆலியார் அதாவுல்லா (AIT INSAAF), A.அர்ஷத்(INTJ), N.பன்னீர் (மதிமுக), T.M. சலீம் Ex.MC, நண்பர்கள் டிரஸ்ட் நிர்வாகிகள், தலைவர் முஹம்மத் ஜாபர் உட்பட, துணைத் தலைவர் தாஜுத்தீன் அஸ்கர், பொருளாளர் முஹம்மத் வசீம், செயலாளர்கள் நிஜாமுத்தீன் அஸ்லம், அஜீமுத்தீன், முஹம்மத் சலீம், கஸ்பா இம்தியாஸ், ரபீக் ரப்பானி, செயற்குழு உறுப்பினர்கள் கணேசன், முஹம்மத் உமர், இர்பான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சாலையெங்கிலும் மஜகவின் கொடிகளுடன் பிரமாண்ட ஏற்பாட்டுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் சுமார் 350-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இதில் முதலாவதாக பேசிய S.அருணோதயம் அவர்கள் நல்லிணக்கத்திற்கு மதம் எந்த விதத்திலும் தடையாக இருப்பதில்லை என்பதற்கு அடையாளமாக எங்கள் குடியாத்தில் ஒரு சம்பவத்தை மஜகவின் தொடர்ந்து செய்து வருகின்றனர்.
என்றவர், குடியாத்தம் கெங்கை அம்மன் திருவிழாவிற்கு வந்த மாற்று மத சகோதர்களுக்கு வருட வருடம் தண்ணிர் மற்றும் குளிர்பானங்கள் வழங்குதல் மற்றும் அனைத்து தரப்பினர் பலன் பெரும் வகையில் மருத்துவ முகாம் நடத்துதல் என மஜக-வினர் மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தை நிலை நிறுத்தும் வகையில் ஒருவருக்கொருவர் மதிப்புடனும் தோழமையுடனும் மக்களிடம் தம்முடைய அன்புச் செயல்களாலும் சேவைகளாலும் மஜக வின் இளைஞர்கள் செயல்படுவதால் அது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளதாக வெகுவாக பாரட்டினார்.
அவரை தொடர்ந்து பேசிய மற்ற அனைவரும் நல்லிணக்கத்தையும் சகோதரத்துவத்தையும் மஜகவினர் தொடர்ந்து நிலை நிறுத்தி வருகின்றனர் என்றனர்.
இறுதியாக நல்லிணக்க உரையாற்றிய
#மஜக மாநில பொருளாளர் #எஸ்_எஸ்_ஹாரூன்_ரஷித்_M.com அவர்கள், மதங்களுக்கிடையே நல்லிணக்கம் என்பது இன்றைய உலகின் அவசியத் தேவை என்றதுடன், பிற மதத்தவர்களுடன் சினேகமாக இருந்து பரஸ்பரம் அனைத்து சமூகத்தவரும் உதவி உபசாரங்கள் செய்து நீதமாக நடந்து கொள்ள வேண்டும் என்று அல் குர்ஆனிலே அல்லாஹ் அனுமதித்துள்ளான் என்பதையும் எடுத்துரைத்தார், மனிதநேய ஜனநாயக கட்சியினர் தங்கள் சக்திக்கு ஏற்ற அளவில் பாடுபட்டு, இதே ஒத்த கருத்துடைய சகோதர சமூகத்தவரையும் இணைத்துக்கொண்டு உரிய தளங்களில் பணியாற்றி இது போன்ற நிகழ்வுகளின் மூலமாகவே மக்கள் மத்தியில் பரஸ்பரம் புரிதல்களை ஏற்படுத்த வேண்டும் என்று பேசினார்.
நிகழ்ச்சியின் முடிவில் தன்னேழுச்சியாக இளைஞர்கள் தங்களை மஜகவில் இணைத்து கொண்டனர்.
இதில் வேலூர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் குடியாத்தம் நகர துணை செயலாளர்கள் சலீம், ஷாபீர், நகர இளைஞர் அணி செயலாளர் முஹம்மத் கெளவுஸ், ஒன்றிய செயலாளர் முபாரக், ஒன்றிய பொருளாளர் இம்தியாஸ், பிலால், கிளை நிர்வாகிகள் சாதிக், சித்திக், ரஹ்மான், அல்தாப், முபாரக், அலீம், நகர, ஒன்றிய, கிளை, நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_வேலூர்_மேற்கு_மாவட்டம்
#மஜக_குடியாத்தம்_நகரம்
09.06.18